இதுதான் கடைசி… இனி சிந்துஜா இல்ல… பிபிஇ கிட்டுடன் வந்த அருண்ராஜா காமராஜ்..
சென்னை : பிரபல இளம் இயக்குனர் அருண்ராஜா காமராஜ், மனைவி சிந்துஜா கொரோனா நோயால் உயிர் இழந்தார்.
மனைவியை கடைசியாக ஒருமுறை பார்க்க அருண்ராஜா காமராஜ் பிபிஇ கிட்டுடன் வந்திருந்தார்.
இணையத்தில் வெளியான இந்த புகைப்படம் அனைவரையும் கலக்கமடையச் செய்து, எதிரிக்கு கூட இந்த நிலை வரக்கூடாது கடவுளே என அனைவரும் வேதனை அடைந்தனர்.

கனா இயக்குனர்
தமிழ் சினிமாவின் இளம் இயக்குனர் அருண் ராஜா காமராஜ். நடிகர், பாடகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முக திறமையாளர். நடிகர் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரான இவர். அந்த நட்பின் காரணமாக தனது தயாரிப்பில் கனா என்ற படத்தை அவருக்கு இயக்கும் வாய்ப்பை தந்தார். அந்தப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

தமிழ் ரீமேக்
இந்தியில் மிகப்பெரிய ஹிட்டடித்த ஆர்டிக்கிள்15 தமிழ் ரீமேக்கை இயக்கி வருகிறார். இதில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடந்து முடிந்த நிலையில், தற்போது ஊரடங்கு முடிவுக்கு வந்த பின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

உயிரிழந்தார்
இந்நிலையில், அருண் ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா. இருவரும் காதலித்து, திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவருமே கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், சிந்துஜா, நேற்றிரவு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிபிஇ கிட்டுடன்
மனைவியை இழந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அருண்ராஜா, தனது மனைவியை கடைசியாக ஒரு முறை பார்த்துவிட வேண்டும் என்று பிபிஇ கிட்டுடன் மருத்துவமனைக்கு வந்தார். இணையத்தில் இந்த புகைப்படங்கள் வெளியாகி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

நேரில் அஞ்சலி
அருண்ராஜாவின் உயிர் நண்பரான சிவகார்த்திகேயன் சிந்துஜாவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். சமூக வலைத்தளங்களில் வெளியான இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், எதிரிக்கு கூட இந்த நிலை வரக்கூடாது கடவுளே என, அனைவரும் கண்ணீர் வடிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











