குட்டி ஸ்டோரி பாடலுக்கு கிடைத்த வரவேற்பு.. விஜயை இயக்கப்போகும் அருண்ராஜா காமராஜ்!
சென்னை: குட்டி ஸ்டோரி பாடல் செம ஹிட் ஆன நிலையில் அடுத்து இயக்குநர் அருண் ராஜா காமராஜ் நடிகர் விஜயை வைத்து இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அருண்ராஜா காமராஜ் சிவகார்த்திகேயனின் கனா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து பாடலாசிரியராக பல பாடல்களை எழுதியுள்ள அருண்ராஜா காமராஜ் பின்னணி பாடகராக ஏராளமான பாடல்களை பாடியிருக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்தின் கபாலி படத்தில் இடம் பெற்ற நெருப்புடா.. நெருங்குடா.. பாடல் பெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் விஜயின் மாஸ்டர் படத்தில் குட்டி ஸ்டோரி பாடலை எழுதியிருந்தார் அருண்ராஜா காமராஜ்.

துப்பாக்கி 2?
ஆனால் லாக்டவுன் காரணமாக இந்தப் படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது. இந்நிலையில் விஜயின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விஜயின் அடுத்தப்படம் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான துப்பாக்கி 2 என்று ஒரு பக்கம் தகவல் பரப்பி வருகிறது.

விஜயை அணுகிய இயக்குநர்
இந்நிலையில் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் விஜயை இயக்க அவரை அணுகியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக ஊடகம் ஒன்றில் அண்மையில் பேசிய இயக்குநர் அருண்ராஜா காமராஜ், விஜயின் அடுத்தப்படத்தை இயக்குவது தொடர்பாக அவரை அணுகியதாக கூறியிருக்கிறார்.

கதை சொன்னதில் மகிழ்ச்சி
தனது ஐடியாவை விஜயிடம் கூறியதாகவும் கோவிட் - 19 காரணமாக படப்பிடிப்பு தள்ளி போவதாகவும் கூறியுள்ளார். இருப்பினும் விஜயை வைத்து படம் இயக்குவது உறுதி என்றும் அருண்ராஜா காமராஜ் கூறியுள்ளார். மேலும் நடிகர் விஜயை சந்தித்து கதையை கூறியதில் மகிழ்ச்சி என்றும் அருண்ராஜா காமராஜ் கூறியிருக்கிறார்.
Recommended Video

நல்ல வரவேற்பு
பாடலாசிரியராக இருந்த அருண்ராஜா காமராஜ், தனது நண்பரான சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் அவர் நடித்த கனா படத்தின் மூலம் இயக்குநரானார். மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











