Kaavaalaa - எல்லாமே நெல்சன் ஐடியாதான்.. காவாலா சீக்ரெட் பகிர்ந்த அருண்ராஜா காமராஜ்
சென்னை: Kaavaalaa (காவாலா) காவாலா பாடல் எழுதிய அனுபவம் குறித்து பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் தனது அனுபவங்களை ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு உருவாகியிருக்கும் அந்தப் படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. ரஜினியுடன் மோகன் லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, தமன்னா உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. பான் இந்திய படமாக ஜெயிலர் உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஃபர்ஸ்ட் சிங்கிள்: படத்திலிருந்து முதல் சிங்கிளான காவாலா பாடல் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. பாடல் வெளியானதிலிருந்து பலரும் அந்தப் பாடல் குறித்தே பேசிவருகின்றனர். மேலும் அந்தப் பாடலுக்கு நடனமாடி ரீல்ஸாகவும் பதிவு செய்துவருகின்றனர். பாடல் அட்டகாசமாக இருக்கிறது. நல்ல வைப் செய்யலாம் என அனிருத் ரசிகர்கள் கூறுகின்றனர். பாடலை அருண்ராஜா காமராஜ் எழுத ஷில்பா ராவ் பாடியிருக்கிறார்.
ட்ரோல்கள்: அதேசமயம் பாடல் ட்ரோலையும் சந்தித்துள்ளது. குறிப்பாக ரஜினி பாடல் போன்றே இது இல்லை. முழுக்க முழுக்க தமன்னாதான் ஆட்சி செய்துகொண்டிருக்கிறார். எனவே இந்தப் பாடல் தங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துவிட்டதாக ரஜினி ரசிகர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி நெட்டிசன்ஸ் பலர் இந்தப் பாடலில் ரஜினியின் அப்பியரன்ஸை வைத்து பல மீம்ஸ்களையும் பதிவிட்டுவருகின்றனர்.

கவர்ச்சி நடனம்: பாடலின் ஹைலைட்டாக இருப்பது தமன்னா. சமீபகாலமாகவே கவர்ச்சியில் தாராளம் காட்டிவரும் தமன்னா இந்தப் பாடலிலும் அதையே செய்திருக்கிறார். அதேபோல் தமன்னா போடும் ஸ்டெப்புகளும் வளைந்து நெளிந்தபடி இருப்பதால் ரசிகர்கள் அதனை வெகுவாகவே ரசித்துவருகின்றனர். இருப்பினும் ஒரு பக்கம் பாடலின் கோரியோகிராஃபி படு திராபையாக இருக்கிறது என்றும் விமர்சனம் வைத்துவருகின்றனர்.
அருண்ராஜா பேட்டி: இப்படி பாடல் கலவையான விமர்சனங்களை பெற்றுவரும் சூழலில் பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் காவாலா பாடல் எழுதிய அனுபவம் குறித்து பகிர்ந்திருக்கிறார். அவர் அளித்த பேட்டி ஒன்றில் பேசுகையில், "ஒருமுறை நெல்சன் திலீப்குமாரிடமிருந்து ஃபோன் வந்தது. அப்போது பேசிய அவர் அருண் ஒரு பாட்டு இருக்கு எழுதுறியானு கேட்டார். நான் ஓகே சொன்னேன். சரி அனிருத்திடம் பேசிக்கோ என்றார். மேலும் பாடல் தமிழ் மற்றும் தெலுங்கில் இருக்க வேண்டும் என்பது அவருடைய ஐடியாதான்.

முதல் வெர்ஷன் ஓகே: அதனையடுத்து அனிருத் ட்யூன் அனுப்பினார். நானும் எழுதினேன். பாடலில் காவாலா என்றால் வேண்டுமா என்று அர்த்தம். காவாலி என்றால் வேண்டும் என்று அர்த்தம். நமக்கு பழக்கப்படுத்தப்பட்ட தெலுங்கு வார்த்தைகளை வைத்துதான் பாடல் எழுதினேன். ஒருமணி நேரத்தில் பாடலை எழுதிவிட்டேன்.
இதற்கிடையே ஒருமுறை நெல்சன் ஃபோன் செய்தார். நான் அண்ணா என்றேன். என்னடா அண்ணன் பாட்டு எங்க என கேட்டார். எழுதிட்டே இருக்கேன் என்றேன். எவ்ளோ நாளா எழுதுவ என கேட்டார். பாடலை இரண்டு வெர்ஷன்களாக எழுதியிருந்தேன். முதல் வெர்ஷனை அனுப்பினேன். அது எல்லோருக்கும் பிடித்துவிட்டது" என்றார்.


Click it and Unblock the Notifications











