ஆர்டிகிள்15 ரீமேக்.. அருண்ராஜா காமராஜ்.. உதயநிதி கூட்டணி !

சென்னை : இந்தியில் வெற்றிப்பெற்ற ஆர்டிகிள்15 படத்தை தமிழில் ரீமேக் செய்ய உள்ளார் அருண் ராஜா.

பாலிவுட்டில் சென்ற வருடம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய படம் தான் ஆர்டிகிள்15. கடந்த ஆண்டின் சிறந்த படங்களில் ஒன்றாக இந்த படம் தேர்வு செய்யப்பட்டது. ஆயுஷ்மான் குரானா நடித்த இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது .

ArunRaja Kamaraj to remake the Article 15

நடிகர், பாடகர், பாடலாசிரியர் என்று பல வேலைகளை செய்து வந்த அருண்ராஜா காமராஜ் இப்படத்தை இயக்கப்போவதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. இவர் சிவகார்த்திகேயன் தயாரித்த "கனா" படம் மூலம் இயக்குனரானது குறிப்பிடத்தக்கது. அந்த படம் பெரும் அளவில் பேசப்பட்ட நிலையில் ஆர்டிகிள் 15 படத்தை இயக்கப்போவதாக கூறுகின்றனர்.

ArunRaja Kamaraj to remake the Article 15

அந்தப்படத்தில் ஆயுஷ்மான் நடித்த கதாபாத்திரத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளிவந்து உள்ளது. .தல அஜித்தின் "நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களை தயாரித்த போனி கபூர் இந்த படத்தையும் தயாரிக்கப்போவதாக தவகல்கள் வெளிவந்து உள்ளது. எனினும் இப்படத்தை பற்றி முழுமையான அதிகாரபூர்வமான செய்திகள் ஏதும் வெளிவரவில்லை. அதிலும் உதயநிதி நடித்து வெளிவந்த அனைத்து படங்களுமே சராசரியாக நல்ல பெயர்களையே அவருக்கு பெற்று தந்து இருக்கிறது.

ArunRaja Kamaraj to remake the Article 15

விஜய் நடித்து வெளிவர இருக்கும் மாஸ்டர் திரைப்படத்தில் வரும் குழந்தைகளை ஈர்த்த "குட்டி ஸ்டோரி" பாடல் வரிகளை அருண்ராஜா எழுதி பிரபலமானது குறிப்பிடத்தக்கது. அது போல் இந்த படத்திலும் ஒரு சாங் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ArunRaja Kamaraj to remake the Article 15

பாடல் ஆசிரியராகவும் இயக்குனராகவும் பல முறை தன் திறமையை நிரூபிக்க பல முயற்சிகள் செய்யும் ஒரு மல்டி டாஸ்கிங் திறமைசாலி தான் அருண். தொடர்ந்து இவர் வெற்றி பெற வாழ்த்துவோம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X