தளபதி 65 படத்தின் இயக்குநர் இவர் தானா.. வைரலாகும் தகவல்கள்.. சன் பிக்சர்ஸ் சீக்கிரம் சொல்லிடுங்க!

Recommended Video

Thalapathy 65 Updates | Arun Raja Kamaraja | Vijay | Master

சென்னை: கனா படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜ் தான் தளபதி 65 படத்தை இயக்கப் போவதாக நெருங்கிய வட்டத்தில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

வருமான வரித்துறை சிக்கல், அரசியல் என்ட்ரி, மாஸ்டர் பட ஷூட்டிங்கில் விஜய் எடுத்த செல்ஃபி, மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவுக்கு வெயிட்டிங் என நடிகர் விஜயை சுற்றி பல சுவாரஸ்யமான விஷயங்கள் சுழன்று வருகின்றன.

இந்நிலையில், தற்போது மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கவுள்ள 65வது படத்தை கனா படத்தின் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இளைஞர்களுக்கு வாய்ப்பு

இளைஞர்களுக்கு வாய்ப்பு

நடிகர் விஜய் எப்போதுமே இளைஞர்களுக்கும், அறிமுக இயக்குநர்களுக்கும் அவர்களது திறமை அறிந்து வாய்ப்புகளை தொடர்ந்து வழங்கி வருகிறார். புது இயக்குநர் படங்களில் மற்ற ஹீரோக்கள் நடிக்க தயங்கி வரும் சூழலில் மாஸ் நடிகரான விஜய் கதை பிடித்திருந்தால், உடனடியாக ஓகே சொல்லி விடுவார். அட்லீ, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் இதற்கு சமீபத்திய சான்று.

அரசியலுக்கு வருவாரா?

அரசியலுக்கு வருவாரா?

மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பில் இருந்து நடிகர் விஜய்யை அழைத்துச் சென்று, அவரது வீட்டில் சுமார் 23 மணி நேரத்திற்கும் மேலாக வருமான வரித்துறையினர் விசாரணை செய்தனர். மேலும், தற்போது நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இதனால், விஜய் விரைவில் அரசியலுக்கு வருவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இசை வெளியீடு எப்போ?

இசை வெளியீடு எப்போ?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச் மாதம் 10ம் தேதி நடைபெறும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. விரைவில் இதுகுறித்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான சேவியர் பிரிட்டோ அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் மாஸ் ஸ்பீச் மற்றும் அரசியல் என்ட்ரிக்கான மேடையாக அது அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

வதந்திகள்

வதந்திகள்

மாஸ்டர் படம் இறுதிகட்ட ஷூட்டிங்கை எட்டியுள்ள நிலையில், தளபதி 65 படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அட்லீ, ஏ.ஆர். முருகதாஸ், ஷங்கர், பாண்டிராஜ், கார்த்திக் தங்கவேலு, சுதா கொங்கரா என பல பெயர்கள் அடிபட்டு வருகின்றன.

சன் பிக்சர்ஸ்

சன் பிக்சர்ஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் தலைவர் 168 படத்தை தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ் அடுத்ததாக தளபதி விஜய்யின் 65வது படத்தை தயாரிக்க உள்ளதாக உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால், இயக்குநர் யார் என்ற கன்ஃபியூஷன் தான் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது வெளியாகி உள்ள தகவல் மேலும், ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.

இவர் தானா?

இவர் தானா?

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள விஜய்யின் தளபதி 65 படத்தை கனா படத்தின் இயக்குநர் அருண் ராஜா காமராஜ் தான் இயக்கப் போகிறார் என்ற தகவல் கசிந்துள்ளது. மேலும், விஜய்யின் ஆல் டைம் ஃபேவரைட் இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. சன் பிக்சர்ஸ் எப்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் போகிறதோ தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X