Just In
- 28 min ago
சனம் ஷெட்டியின் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. அவங்களே சொல்லியிருக்காங்க.. என்னன்னு பாருங்க!
- 50 min ago
'கே.ஜி.எஃப்' இயக்குனரின் 'சலார்' படத்தில் .. பிரபாஸூக்கு வில்லன் ஆகிறார், நடிகர் விஜய் சேதுபதி?
- 58 min ago
ஹிப்ஹாப் ஆதியின் "அன்பறிவு" படப்பிடிப்பு ஆரம்பம்!
- 1 hr ago
பிரம்மாண்ட அரங்கில் தொடங்கியது ‘கலியுகம்’ படப்பிடிப்பு.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
Don't Miss!
- Lifestyle
நல்லது என நீங்க நினைக்கும் இந்த உணவு முறை உங்க தூக்கத்தை சீர்குலைக்குமாம்...!
- Finance
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அமெரிக்க அதிபர்.. இனி வேற லெவல் தான்..!
- News
கமலா மேடம்.. உங்களுக்காக சூடான புளியோதரை.. தெறிக்க விட்ட பத்மலட்சுமி!
- Automobiles
முண்டாசு கட்டிய பிஎம்டபிள்யூ... இந்தியாவில் 25 புதிய மாடல்களுடன் தெறிக்கவிட திட்டம்!
- Sports
உண்மையிலேயே பெரிய வெற்றியாளர்... மலிங்காவை ரொம்ப மிஸ் செய்வோம்... ரோகித் சர்மா நெகிழ்ச்சி
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அதாரு அதாரு.. உதாரு உதாரு.. கல்லூரி மாணவர்களுடன் அருண் விஜய்.. கலக்கல் டான்ஸ்!
சென்னை : ஒரு தனியார் கல்லூரியில் நடந்த மாஃபியா பட விளம்பரத்தில் கல்லூரி மாணவர்களோடு அத்தாரு அத்தாரு பாடலுக்கு செம்மையாக ஆடினார் அருண்விஜய். இந்த காணொலி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .
நடிகர் அருண்விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் மாஃபியா. இந்த படம் வரும் பிப்ரவரி 21 வெளியாகுகிறது. படத்தை கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார். படத்தை சுபாஸ்கரன் தயாரித்து இருக்கிறார். படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டங்கள் இதற்கு முன்பே வெளியாகிவிட்டது .

இந்த படத்தில் அருண்விஜய் போலீஸாக நடிக்கிறார். மற்றும் படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் பிரசன்னா நடிக்கிறார். இரு வேறு துருவங்களாக இருவரும் நடிப்பதே படத்தின் மீது மிக பெரிய எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது .
மேலும் இது கார்த்திக் நரேனின் இரண்டாவது படமாகும். துருவங்கள் பதினாறு மிக பெரிய வெற்றி அடைந்த படம். அவ்வளவு சிறிய பட்ஜெட்டில் உருவாகி நூறு நாட்களை கடந்த படமாகும் அது.
தற்போது இவர் இயக்கியுள்ள மாஃபியா படத்தின் விளம்பரத்திற்காக படக்குழு பல நேர்காணல்களையும் பேட்டிகளையும் கொடுத்து வருகிறது. அதனை தாண்டி பல கல்லூரிகளுக்கும் படக்குழு சென்று படத்தை பற்றிய சுவாரஸ்யமான விசயங்களை பகிர்ந்து வருகிறது .

ஒரு தனியார் கல்லூரியில் அருண்விஜய் கலந்து கொண்டு பேசும் போது கூட இந்த கல்லூரிக்கு தடம் படத்திற்கு முன் வந்தேன் படம் மிக பெரிய வெற்றி அடைந்ததது தற்போது மாஃபியா படத்திற்கும் வந்துள்ளேன். இந்த படமும் நல்ல வெற்றி அடையும் என நம்புகிறேன் என கூறியிருந்தார் .
அருண்விஜய் தற்போது சென்னையில் ஒரு தனியார் கல்லூரியில் நடந்த மாஃபியா தொடர்பான விழாவில் அந்த கல்லூரியின் மாணவர்களோடு அத்தாரு அத்தாரு பாடலுக்கு செம்மையாக ஆடியுள்ளார். இந்த காணொலி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .

அருண்விஜய் மாஃபியா படத்திற்கு பிறகு அக்னிசிறகுகள் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் எப்போது வருமென ரசிகர்கள் மிக பெரிய அளவில் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த படத்திற்கு பிறகு ரித்திகாவுடன் பாக்ஸர் படத்தில் நடித்து வருகிறார். இதன் பின் குற்றம்23 இயக்குனர் படத்தில் நடிக்க உள்ளார் .