ஒரே நாளில் அருண் விஜய் மற்றும் சிம்ரன் வீட்டில் பர்த்டே.. வாழ்த்து கூறிய பிரபலங்கள்!

சென்னை : அருண் விஜய் தனது செல்ல மகள் பூர்வி-யின் பிறந்த நாளான இன்று அவருடன் இருக்கும் க்யூட்டான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் சந்தோசமாக பகிர்ந்துள்ளார்.

அதேவேளையில் நடிகை சிம்ரன் தனது செல்ல மகன் அதீப் என்கிற ஓடோ-வின் பிறந்தநாளை இன்று சந்தோஷமாக கொண்டாடி வருகிறார். இதையடுத்து ஓடோவுடன் இருக்கும் க்யூட்டான படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவுசெய்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இப்படி ஒரே நாளில் இரண்டு நட்சத்திரங்களின் மகன் மற்றும் மகள் பிறந்தநாள்களை கொண்டாடி வருவதையொட்டி அவர்களது ரசிகர்களும் திரைத்துறையை சேர்ந்த நண்பர்களும் அந்த குட்டீஸ்க்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 நீண்ட போராட்டம்

நீண்ட போராட்டம்

நடிகர் விஜயகுமாரின் மகனான அருண் விஜய் ஆரம்ப காலத்தில் பல படங்கள் நடித்திருந்தாலும் அவருக்கு அது சரியாக கைகொடுக்கவில்லை. நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு கமர்சியல் வெற்றி படங்களான மாஞ்சாவேலு, தடையற தாக்க போன்ற படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் இவர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் என்னை அறிந்தால் படத்தில் விக்டர் என்ற கதாபாத்திரத்தில் ஆக்ரோஷமான தனது நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

திருப்புமுனையாக

திருப்புமுனையாக

ஹீரோவுக்கு இணையான ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் கலக்கியிருந்த இவருக்கு இந்த படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதுதான் உன் டைம் போட்டுத்தாக்கு போட்டுத்தாக்கு என்றவாறு அதற்குப் பிறகு இவர் நடித்த படங்கள் அனைத்தும் பிளாக்பஸ்டர் ஹிட்டாகி இவரது மார்க்கெட் எங்கேயோ போனது. இதை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் இவர் நடித்த "செக்கச்சிவந்த வானம்" இவரை ஸ்டைலிஷ் ஹீரோ என்ற அளவுக்கு தூக்கி நிறுத்தியது. குறிப்பாகச் செக்கச்சிவந்த வானம் படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி என பல ஹீரோக்கள் நடித்திருந்தாலும் இவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

மகள் பிறந்த நாள்

மகள் பிறந்த நாள்

இவர் 2006ஆம் ஆண்டு பிரபல திரைப்பட தயாரிப்பாளரின் மகளான ஆரத்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு பூர்வி என்ற மகளும் அர்னவ் என்ற மகனும் இருக்கின்றனர். ஜூன் 11 பூர்வியின் பிறந்த நாளான இன்று அவருக்கு வாழ்த்து சொல்லும் விதமாக தனது இன்ஸ்டாகிராமில் அவருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட பல புகைப்படங்களை பகிர்ந்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இதை பார்த்த அவரது ரசிகர்களும் மற்றும் பல திரை பிரபலங்களும் பூர்விக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நீங்கா இடம்

நீங்கா இடம்

அதேசமயம் தமிழில் மிகவும் பிரபலமான நடிகையான சிம்ரன். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். நடனம் நடிப்பு என எதை கையில் எடுத்தாலும் அதில் மரண மாஸ் காட்ட கூடிய இவர் அனைத்து முன்னணி கதாநாயகர்களுடனும் நடித்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

ஓடோ பிறந்தநாள்

ஓடோ பிறந்தநாள்

இவ்வாறு பலரின் கனவு கன்னியாக வலம் வந்த இவர் 2003 ஆம் ஆண்டு தீபக் பக்கா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு அழகான மகன்கள் இருக்கின்ற நிலையில், தனது மூத்த மகனான அதீப் என்கிற ஓடோ-வின் பிறந்தநாளை இன்று ஜாலியாக கொண்டாடி வருகிறார். மேலும் தனது மகனுடன் இருக்கும் படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் இதைப் பார்த்து அவரது ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்களும் ஓடோ-விற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர். எனவே இன்று ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடும் நட்சத்திர வாரிசுகளான பூர்வி மற்றும் ஓடோ இருவருக்கும் நாமும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்ளலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X