நினைத்ததை விட மாஃபியா சூப்பரா வந்துருக்கு .. படம் நிச்சயம் வெற்றி.. அருண்விஜய் நம்பிக்கை !
சென்னை : நான் நினைத்ததை விட மாஃபியா சூப்பரா வந்து இருப்பதாக நடிகர் அருண்விஜய் கூறினார்.
நடிகர் அருண்விஜய் பல போராட்டங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் ஒரு திடமான ஹீரோவாக வளர்ந்து உள்ளார். இவரின் கதை தேர்வுகளும் படங்களும் தொடர்ந்து பாராட்டபட்டு வருகிறது. அப்படி ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கபடும் படமான மாஃபியா படம் வரும் பிப்ரவரி 21 வெளியாகுகிறது .

இந்த படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன் இதற்கு முன் துருவங்கள் பதினாறு மற்றும் நரகாசூரன் படங்களை இயக்கியுள்ளார். இதில் சில பிரச்சனைகள் காரணமாக இன்று வரை நரகாசூரன் படம் வெளியாகவில்லை .
கார்த்திக் நரேனின் துருவங்கள் பதினாறு படமே எனக்கு மிகவும் பிடித்த படம் , அவர் கதை சொல்ல வரும் போதே புதிதாக பல விசயங்களுடன் தான் வந்திருப்பார் என எதிர்பார்த்தேன் அதே போல தான் கதை இருந்தது என மாஃபியா பட விளம்பரங்களின் போது அருண்விஜய் கூறினார் .

மேலும் கார்த்திக் நரேன் ஒரு ரசிகரை போல படம் எடுக்கும் போது ஒவ்வொரு ஷாட்டும் ஓகே ஆனதும் கைதட்டி கத்தி சூப்பர் என்று கூறுவார் என அருண்விஜய் தெரிவித்திருந்தார். மேலும் இந்த படத்தில் தேவையில்லாத ஒரு காட்சி கூட படமாக்கபட வில்லை. கதையில் என்ன இருந்ததோ அதை தான் எடுத்து இருக்கிறார் கார்த்திக் நரேன் கூறினார் அருண்விஜய் . மேலும், நான் நினைத்ததை விட மாஃபியா 2 மடங்கு நல்ல சூப்பரா வந்து இருக்கு நிச்சயம் இந்த படம் வெற்றி பெறும் என்றார்.

நடிகர் அருண்விஜய் பல நாட்களாக வீட்டுக்கு தெரியாமல் பைக் ஸ்டென்ட் கற்று வந்தாராம். அவரின் அப்பா இது ஆபத்து என்று தடுத்ததால் அவர் வீட்டுக்கு தெரியாமல் பைக் ஸ்டென்ட் கற்றாராம் .மேலும் அது வீட்டுக்கு தெரிந்த பிறகு இப்போது தான் கிராபிக்ஸ் தொழில்நுட்பம் அதிகரித்து விட்டது இப்போது எதற்கு பைக் ஸ்டென்ட் என்று எல்லாம் கண்டித்ததும் அதை விட்டுவிட்டாராம் அருண்விஜய் .
அருண்விஜய் அடுத்ததாக அக்னிசிறகுகள் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளிலும் வடஆசிய நாடுகளிலும் நடந்து முடிந்துள்ளது. வரவிருக்கும்அருண்விஜய் படங்களில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக இந்த படம் இருக்கிறது. இந்த படத்தை மூடர் கூடம் நவீன் இயக்கி வருகிறார்

அருண்விஜய் அடுத்ததாக பாக்ஸர் மற்றும் சினம் படங்களில் நடித்து வருகிறார். பாக்ஸர் படத்தில் உண்மையான பாக்ஸரான ரித்திகா சிங்கும் நாயகியாக நடித்து வருகிறார். மேலும் குற்றம் 23 இயக்குனருடன் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் அருண்விஜய்.


Click it and Unblock the Notifications











