அருண்விஜய்யின் முறைப்பொண்ணு.. அட்டகாசமான போட்டோஸ்.. இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே !

சென்னை : அருண்விஜய் அக்காவின் மகள் தியாவின் புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதைப்பார்த்தை பலர் முறைப்பொண்ணா என கூறி விசாரித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் பிரபலமான சினிமா குடும்பத்தைச் சேர்ந்த வாரிசு நடிகர் அருண் விஜய் தற்பொழுது தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து மாஸ் காட்டி வருகிறார்.

தல அஜீத் குமாருடன் இணைந்து என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்ததற்கு பிறகு திரைத்துறையில் இவரது செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கி பேக் டு பேக் வெற்றி படங்களை தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

தொலைக்காட்சித் தொடர்கள்

தொலைக்காட்சித் தொடர்கள்

சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவரான விஜயகுமார் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகராக வலம் வருகிறார். திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் என நடித்துவரும் விஜயகுமாருக்கு முத்துக்கண்ணு மற்றும் மஞ்சுளா என இரு மனைவிகள் இருந்துள்ளனர்.

பேசுவதை நிறுத்தி

பேசுவதை நிறுத்தி

இந்நிலையில் தற்போது பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் வனிதா விஜயகுமார் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவருக்கும் மிகவும் பிரபலமானார். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு வனிதாவுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் பிரச்சனை இருந்து வந்த நிலையில் விஜயகுமார் அருண் விஜய் உள்ளிட்ட அவரது குடும்பத்தைச் சேர்ந்த பலரும் வானிதாவிடம் பேசுவதை நிறுத்தி விட்டார்கள். இதனால் ஏற்கனவே 2 திருமணம் ஆன வனிதா தற்போது மூன்றாவதாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து தற்பொழுது அது சர்ச்சைகளில் போய்க்கொண்டிருக்கிறது.

இரண்டு சகோதரிகளான

இரண்டு சகோதரிகளான

வனிதா விஜயகுமார் அருண் விஜய்யின் கூட பிறந்த சகோதரி இல்லை என்பது அனைவரும் அறியாத ஒன்று. நடிகர் விஜயகுமாருக்கு முத்துக்கண்ணு மற்றும் மஞ்சுளா என இரண்டு மனைவிகள் இருந்த நிலையில், அதில் முத்துக்கண்ணு என்பவருக்கு பிறந்தவர்கள் தான் அருண்விஜய் மற்றும் அவருடன் பிறந்த இரண்டு சகோதரிகளான அனிதா மற்றும் கவிதா.

லண்டனில் குடும்பத்துடன்

லண்டனில் குடும்பத்துடன்

விஜயகுமாரின் இரண்டாவது மனைவியான நடிகை மஞ்சுளாவுக்கு பிறந்தவர்கள் வனிதா, ப்ரீத்தா மற்றும் ஸ்ரீதேவி. எனினும் அருண் விஜய் தன்னுடன் பிறவாத சகோதரிகளையும் தனது சொந்த சகோதரிகளைப் போல பாவித்து வரும் நிலையில் அருண் விஜய் உடன் பிறந்த சகோதரி அனிதா திருமணமாகி தற்போது லண்டனில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

மகள் தியா

மகள் தியா

விஜயகுமாரின் குடும்பத்தில் அனைவரும் திரைப்படத்துறையில் இருந்துவரும் நிலையில் அனிதா மட்டும் திரைப்படங்களில் எதுவும் நடிக்காமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். அதில் அனிதாவின் மகளான தியா தற்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றார்

யாரும் பார்த்திராத

யாரும் பார்த்திராத

அருண் விஜய்யின் குடும்பத்தில் உள்ள அனைவரையும் பலருக்கும் தெரிந்த நிலையில் அனிதாவின் மகளான தியா தற்பொழுது பெரிய பெண்ணாக வளர்ந்து இதுவரை யாரும் பார்த்திராத நிலையில் அவரது புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Recommended Video

Anne Weightu Weightu Album Song | Vijay Sethupathi • Sridhar
முறைப் பொண்

முறைப் பொண்

தியாவின் லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்த இணையவாசிகள் அருண் விஜய்க்கு இப்படி ஒரு அழகான முறைப் பொண்ணா என வாயைபிளந்து ரசித்து வருகின்றனர். இவ்வாறு தனது அழகான புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வரும் தியா எப்பொழுது தமிழ் திரைப்படங்களில் நடிப்பார் என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X