எனது அப்பாவின் அரவணைப்பில் எனது மகன்.. அருண்விஜய் பெருமிதம்!

சென்னை : நடிகர் அருண் விஜய், அப்பா விஜயகுமாரின் அரவணைப்பில் தனது மகன் வளர்ந்து வருவதை பூரித்து புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

சினம், பாக்சர், அக்னி சிறகுகள் உள்ளிட்ட திரைப்படங்களை தொடர்ந்து இயக்குனர் ஹரியுடன் இணைந்து அதிரடி ஆக்ஷன் திரைப்படம் ஒன்றில் நடிக்க அருண்விஜய் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த நிலையில் தந்தை விஜயகுமார் உடன் தனது மகன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு உங்களின் அரவணைப்பில் எனது மகன் வளர்வது எனது பாக்கியம் என பூரித்து பதிவிட்டுள்ளார்.

வெளியாக தயாராக

வெளியாக தயாராக

விஜய் ஆண்டனி, அருண் விஜய் இருவரும் முதல் முறையாக இணைந்து நடித்து வரும் "அக்னி சிறகுகள்" திரைப்படத்தின் பணிகள் முற்றிலும் முடிந்து விரைவில் வெளியாக தயாராக இருக்கின்ற நிலையில் அருண் விஜய்க்கு அடுத்தடுத்த திரைப்படங்கள் வரிசை கட்டிக்கொண்டு உள்ளன.

ஆக்ரோஷமான வில்லன்

ஆக்ரோஷமான வில்லன்

தொடர் தோல்விகளை சந்தித்து கொண்டிருந்த அருண்விஜய் என்னை அறிந்தால் திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த நிலையில் அதில் ஆக்ரோஷமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்ததைத் தொடர்ந்து இப்பொழுது இவரின் திரைப்படங்களைக் காணவே ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

ஹரியுடன் இணைந்து

ஹரியுடன் இணைந்து

எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அருண் விஜய்க்கு தொடர்ந்து ஹிட் படங்களாக அமைந்து வர இப்பொழுது பாக்சர், சினம், அக்னி சிறகுகள் மற்றும் இயக்குனர் ஹரியுடன் இணைந்து புதிய திரைப்படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

திருமண நாளைக் கொண்டாடி

திருமண நாளைக் கொண்டாடி

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தடத்தை பதித்து வெற்றி வாகையை சூடி சிறந்த நடிகராக திகழ்ந்து வரும் அருண்விஜய்க்கு திருமணமாகி ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை இருக்கின்ற நிலையில் சமீபத்தில் திருமண நாளைக் கொண்டாடினார்.

அப்பாவின் அரவணைப்பில்

அப்பாவின் அரவணைப்பில்

அருண் விஜய்யின் இந்த முன்னேற்றத்திற்கு அவரது தந்தை நடிகர் விஜயகுமார் மிகப்பெரிய பங்கு வகிக்கின்ற நிலையில் இப்பொழுது அருண் விஜய்யின் மகன் விஜயக்குமாரின் மாடியில் உட்கார்ந்து கொண்டு இருவரும் ஒரே மாதிரி பனியன் அணிந்தவாறு இருக்கின்ற புகைப்படத்தை பதிவிட்டு அப்பாவின் அரவணைப்பில் எனது மகன் வளர்வது எனது பாக்கியம் என நெகிழ்ந்து கூறியிருப்பது அனைவரையும் ரசிக்க வைத்ததோடு வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X