சாமி 2வில் விட்டதை அருவாவில் பிடிப்பாரா ஹரி.. டிரெண்டாகும் அருவா ஹாஷ்டேக்.. #ARUVAA!

சென்னை: இயக்குநர் ஹரி படங்கள் என்றாலே ஸ்பீடுக்கு குறைவில்லாமல் இருக்கும்.

ஆறு படத்தில் தொடங்கிய ஹரி - சூர்யா கூட்டணி ஆறவது படமாக தற்போது அருவா படத்தில் தொடர்கிறது.

தீபாவளிக்கு சூர்யா திருப்பாச்சி அருவாவ தீட்டிக்கிட்டு வரப் போறாரு என அறிந்த சூர்யா ரசிகர்கள், பல ஹாஷ்டேக்குகளை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

வாங்கலே

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த பல படங்களில் அருவா முக்கியமான ஆயுதமாக காட்டப்பட்டுள்ளது. சிங்கம் 2ம் பாகத்தில் மழையில் நனைந்தபடி, சூர்யா எதிரிகளை அருவா கொண்டு வெட்டி சாய்க்கும் சண்டை காட்சி மிரட்டி இருக்கும். அதன் வீடியோவை பதிவிட்டு, சூர்யா ரசிகர்கள் ஹாஷ்டேக் அருவாவை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

போட்டி இல்லை

அஜித் மற்றும் சூர்யா ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே ஒரு சுமூகமான நட்பு இருந்து வருகிறது. இந்நிலையில், வரும் தீபாவளிக்கு அஜித்தின் வலிமை மற்றும் சூர்யாவின் அருவா ஆகிய படங்கள் மோத உள்ள நிலையில், இது போட்டி இல்லை, அருவா மற்றும் வலிமை படத்தின் தீபாவளி என ரசிகர்கள் விளக்கம் கொடுத்து வருகின்றனர்.

ஒரே மூச்சி.. ஒரே வீச்சு

ஏப்ரல் மாதத்தில் தொடங்க உள்ள சூர்யாவின் அருவா திரைப்படத்தின் ஷூட்டிங், பல கட்ட படப்பிடிப்புகள் இன்றி, சிங்கிள் ஷெட்யூலில் ஒரே மூச்சாக எடுக்கப்பட்டு, ஒரே வீச்சாக வரும் தீபாவளிக்கு தியேட்டர்களை கிழிக்கும் என சூர்யா ரசிகர்கள் தற்போது ட்விட்டரை கிழித்து வருகின்றனர்.

டபுள் ட்ரீட்

சூர்யா ரசிகர்களுக்கு வரும் ஏப்ரல் மாதம் சூரரைப் போற்று மற்றும் தீபாவளிக்கு அருவா படம் என டபுள் ட்ரீட் இந்த ஆண்டு காத்திருக்கிறது. ஆக்‌ஷன் பேக்குடன் பக்கா மாஸ் கமர்ஷியல் படமாக இந்த தீபாவளியை குடும்பத்துடன் தியேட்டரில் கொண்டாடும் விதமாக அருவா வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது நம்ம தீபாவளி

சூர்யாவின் அருவா திரைப்படம் அஜித்தின் வலிமை படத்துடன் தீபாவளி ரேஸில் குதித்துள்ள நிலையில், அதனை போட்டியாக பார்க்காமல், வாழ்த்துக்கள் சூர்யா ரசிகர்களே, இது நம்ம தீபாவளி என தல ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். வலிமை அப்டேட் கிடைக்கவில்லை என்ற கவலையில் இருந்த அஜித் ரசிகர்கள் அருவா அப்டேட்டை கொண்டாடி வருகின்றனர்.

ஆர்யா ட்வீட்

சூர்யாவின் 39வது படத்தை ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில், இயக்குநர் ஹரி இயக்கப் போகிறார் அந்த படத்திற்கு அருவா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பை பார்த்த நடிகர் ஆர்யா, கெத்து என்பது போல எமோஜிக்களை பதிவிட்டுள்ளார். சூர்யா நடித்த காப்பான் படத்தில் ஆர்யா நடித்திருந்த நிலையில், அருவா படத்திற்கு வாழ்த்து சொல்லி உள்ளார்.

மிஸ் ஆகாது

மிஸ் ஆகாது

தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்து வந்த இயக்குநர் ஹரி இயக்கத்தில், கடந்த சில ஆண்டுகளாக வெளியான சிங்கம் 3 மற்றும் சாமி 2 படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில், மீண்டும் இயக்குநர் ஹரியின் கதையை நம்பி நடிகர் சூர்யா வாய்ப்பு கொடுத்திருப்பதால், நிச்சயம் இந்த படம் சொதப்பாது என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X