அதிகாரிகளுடன் காரசார வாக்குவாதம்.. முகக்கவசம் அணியாமல் காரில் சென்ற பிரபல நடிகைக்கு அபராதம்!
சென்னை: முகக்கவசம் இன்றி காரில் பயணம் செய்த நடிகை அதிதி பாலனுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கொரோனா தொற்று உலகம் முழுவதும் மிரட்டி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்றன.
இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த தொற்று காரணமாக உயிரிழப்போர் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.

முடங்கி கிடந்தனர்
இந்த வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க லாக்டவுன் பிறக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள், வீட்டுக்குள் முடங்கி கிடந்தனர். பின்னர், லாக்டவுனில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மூடப்பட்ட தொழில் நிறுவனங்கள், அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன.
சினிமா படப்பிடிப்புகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டன.

சுற்றுலா தலங்கள்
சினிமா தியேட்டர்களும் விரைவில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், லாக்டவுன் காரணமாக, அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டு இருந்தன. தற்போது தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு சுற்றுலா தலங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஏரிச் சாலை பகுதி
இந்நிலையில், கொடைக்கானலில், ஏரிச் சாலை பகுதியில் சுகாதாரத் துறையினர் மற்றும் மருத்துவத் துறையினர் முகக்கவசம் இன்றி வருபவர்களுக்கு அபராதம் விதித்து வந்தனர். அப்போது அந்த வழியாக முகக்கவசம் இன்றி பயணம் செய்த காரை மறித்து விசாரித்தனர். அதில் இருந்தது அருவி பட நடிகை அதிதி பாலன் என்பது தெரியவந்தது.

வாக்குவாதம்
முகக் கவசம் அணியாததற்காக அவருக்கு மருத்துவத் துறையினர் அபராதம் விதிக்க முயன்றனர். ஆனால் நடிகை அதிதி பாலன் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், அவருக்கு மருத்துவத் துறையினர் ரூ.200 அபராதம் விதித்தனர். பின்னர் அதைக் கட்டிவிட்டு அவர் சென்றார்.

ரசிகர்கள் மத்தியில்
அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கிய படம், 'அருவி'. அதிதி பாலன் நாயகியாக நடித்திருந்தார். அஞ்சலி வரதன், லட்சுமி கோபாலசாமி, கவிதா பாரதி உள்பட பலர் நடித்திருந்தனர். 2017 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதிதி பாலனுக்கு சில விருதுகளும் கிடைத்தது.


Click it and Unblock the Notifications











