அருவி படம் காப்பியா, லட்சுமி ராமகிருஷ்ணனை கலாய்த்தது ஏன்?: அருண் பிரபு விளக்கம்
சென்னை: அருவி படம் அஸ்மா படத்தின் காப்பியா என்பது குறித்து இயக்குனர் அருண் பிரபு விளக்கம் அளித்துள்ளார்.
அருண் பிரபு இயக்கத்தில் வெளியாகியுள்ள அருவி படம் அஸ்மா என்கிற அரபு மொழிப் படத்தின் காப்பி என்று சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.
இந்நிலையில் இது குறித்து அருண் பிரபு பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது,

அருவி
அஸ்மா படம் பற்றி பலரும் ட்வீட்டிய பிறகே அந்த படத்தை பார்த்தேன். அஸ்மா, அருவி ஆகிய இரண்டு படங்களை பார்த்தால் இது காப்பியா இல்லையா என்பது எளிதில் புரிந்துவிடும். அதற்கு இரண்டு படங்களையும் பார்க்க வேண்டும்.

ரசிகர்கள்
அருவி படத்திற்கு இந்த அளவுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது சர்பிரைஸாக உள்ளது. அருவி படத்தை பல முறை பார்த்ததாக பல பேர் என்னிடம் தெரிவித்துள்ளனர். அனைவரின் அன்பையும் பார்த்து என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

ஷாங்காய்
ரியாலிட்டி ஷோக்கள் வர ஆரம்பித்த 2013ம் ஆண்டு நான் அருவி கதையை எழுதினேன். அப்போது சீரியல் பார்த்துக் கொண்டிருந்த மக்கள் ரியாலிட்டி ஷோக்களை பார்க்கத் துவங்கினர்.

சொல்வதெல்லாம் உண்மை
நாட்டில் பல ஷோக்கள் நடந்து கொண்டிருக்கிறது. ஷாங்காயில் ஒரு ஷோ வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட நபரையோ, நிகழ்ச்சியையோ குறி வைக்கவில்லை என்கிறார் அருண்.


Click it and Unblock the Notifications











