அருவி இயக்குனரின் அடுத்த படம் ஓடிடியில் ரிலீஸ்?
சென்னை : அருவி படத்தை தொடர்ந்து இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கியிருக்கும் திரைப்படம் வாழ்.
வசூல் ரீதியாகவும் கமர்ஷியல் ரீதியாகவும் வெற்றி பெற்ற அருவி படம் பல்வேறு விருதுகளை வென்றது.
தற்பொழுது சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் வாழ் படத்தை இயக்கியிருக்கும் அருண் பிரபு அந்த படத்தை ஓடிடியில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அருவி
முதல் படத்திலேயே வெற்றியை கொடுத்த இயக்குனர்களின் பட்டியலில் இருப்பவர் இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன். கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான அருவி என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான இவர் நடிகர் சிவகார்த்திகேயனின் நெருங்கிய உறவுக்காரர் ஆவார்.

பெண்கள் குறித்த படம்
கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதை என்பதால் பெரும் எதிர்பார்ப்பில் வெளியான அருவியில் நடிகை அதிதி பாலன் கதாநாயகியாக நடித்திருந்தார். அஞ்சலி வரதன், கவிதாபாரதி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படம் விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பாக பெண்கள் குறித்த விழிப்புணர்வு படம் சமூகத்தில் அதிக கவனம் பெற்றது.

வாழ்
இந்த நிலையில் தன்னுடைய இரண்டாவது திரைப்படத்தை இயக்க தயாராகி கொண்டிருந்த அருண் பிரபுவுக்கு சிவகார்த்திகேயன் தனது தயாரிப்பிலேயே இயக்கும் வாய்ப்பை வழங்கினார். முதல் படத்தில் போலவே இந்த படத்திலும் முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ளனர். தன்னிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த பிரதீப் என்பவரை இதில் ஹீரோவாக நடிக்க வைத்துள்ளார்.
வாழ் படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில் இந்த படத்துக்கு யு /ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 2019 ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட இதன் படப்பிடிப்பு ஜூலை மாதம் முடித்துள்ளனர்.
Recommended Video

சோனி லைவ்
சென்ற ஆண்டே வெளியாக இருந்த இந்தப்படம் கொரோனா பரவல் காரணமாக தொடர்ந்து தள்ளிப் போய்க் கொண்டே உள்ளது. அதனால் படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி சோனி லைவ் நிறுவனம் இப்படத்தை கைப்பற்றியுள்ளது. விரைவில் இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











