விஜய், லட்சுமி ராமகிருஷ்ணன், கே.எஸ். ரவிக்குமார்னு வச்சு செஞ்ச அருவி #Aruvi

By Siva

Recommended Video

தமிழ் சினிமாவையே வச்சு செஞ்ச அருவி !!- வீடியோ

சென்னை: அருவி படத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன், தளபதி விஜய், கே.எஸ். ரவிக்குமார், தமிழ் சினிமாவை மரண கலாய் கலாய்த்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை வெளியான அருவி படம் பற்றி தான் நெட்டிசன்ஸ் இன்னும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதிதி பாலனின் நடிப்பை அனைவரும் பாராட்டியுள்ளனர்.

ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் படம் செம என்று தெரிவித்துள்ளனர்.

நல்ல படம்

நல்ல படம்

விஜய் படம் நல்ல படமா அது எது? என்று ஒரு காட்சியில் வசனம் வைத்துள்ளனர். இதை பார்த்த விஜய் ரசிகர்களால் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை. இன்னும் படத்தையும், நடிகர்களையும் சமூக வலைதளங்களில் சொல்ல முடியாத அளவுக்கு கெட்ட வார்த்தைகளால் திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

சொல்வதெல்லாம் சத்தியம்

சொல்வதெல்லாம் சத்தியம்

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மூலம் பல குடும்பங்களின் பிரச்சனைகளை தீர்த்து வைத்து வருவதாக லட்சுமி ராமகிருஷ்ணன் பெருமையாக கூறி வருகிறார். இந்நிலையில் அருவி படத்தில் சொல்வதெல்லாம் சத்தியம் என்ற பெயரில் லட்சுமியின் நிகழ்ச்சி டிஆர்பிக்காக நடக்கும் நாடகம் என்று தெரிவித்துள்ளனர்.

பழைய கதை

பழைய கதை

அருவியிடம் ஒருவர் கதை சொல்ல அதை கேட்ட அவர் என்ன பழைய கதையாக சொல்கிறாய் நீ என்ன கே.எஸ். ரவிக்குமாரா என்று முகத்தில் அடித்தது போன்று கேட்டுள்ளார்.

விமர்சனம்

விமர்சனம்

கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணத்தில் ரூ. 150 கொடுத்து சத்தியம் தியேட்டரில் படம் பார்த்தால் நல்லவா இருக்கு. படமாவா எடுக்குறாங்க என்று தமிழ் சினிமாவின் தரத்தையும் விமர்சித்துள்ளது அருவி.

பாராட்டு

பாராட்டு

அருவி படத்தால் லட்சுமி ராமகிருஷ்ணன் கோபம் அடைந்துள்ளார். விஜய் ரசிகர்கள் கோபத்தில் உச்சியில் உள்ளனர். மற்றபடி படத்தை பார்ப்பவர்கள் பாராட்டுகிறார்கள். பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் அருவியை பாராட்டி ட்வீட் போட்டுள்ளார்.

ஸ்பூஃப்

ஸ்பூஃப்

அருவிக்கே கொந்தளிக்கிறார்களே சி.எஸ். அமுதன் தமிழ் படம் 2.0 என்ற பெயரில் ஸ்பூஃப் படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். போஸ்டரிலேயே பெரிய ஆளை கலாய்த்துள்ளனர். அந்த படம் வந்தால் எத்தனை பேர் கொந்தளிக்கப் போகிறார்களோ?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X