என்ன படம்டா இது, என்ன ஹீரோயின் இந்த அதிதி: அருவி ட்விட்டர் விமர்சனம்#Aruvi
Recommended Video

சென்னை: அருவி படத்தை பார்த்தவர்களால் அதை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
அருண் பிரபு இயக்கத்தில் புதுமுகம் அதிதி பாலன் நடித்துள்ள அருவி படம் எந்த வித பந்தாவும் இல்லாமல் இன்று அமைதியாக ரிலீஸாகி ரசிகர்களை பேச வைத்துள்ளது. படத்தை பார்த்தவர்கள் அனைவரும் இம்பிரஸ் ஆகியுள்ளார்.
படத்தை பார்த்தவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.
சான்ஸே இல்லை
#Aruvi- இன்டர்வல், என்ன படம் டா இது. வெறித்தனமாக இரண்டாவது பாதிக்காக காத்திருப்பு
அருமை
யாரும் மிஸ் பண்ணக் கூடாத அருமையான படம் அருவி. பிரபு நீங்கள் மாஸ்டர் பீஸை அளித்துள்ளீர்கள். அண்மையில் இது போன்ற படத்தை நான் பார்க்கவே இல்லை. கிரேட் ஜாப்
புன்னகை
அருவி படம் உங்களை சிரிக்க வைக்கும், சிந்திக்க வைக்கும், அழ வைக்கும், கைதட்ட வைக்கும். ஹீரோயின் என்ன அருமையாக நடித்துள்ளார். சிறப்பான இயக்கம். அனைவரும் திறம்பட நடித்துள்ளார்கள். அருவி பட அனுபவம் அருவி போன்று உள்ளது.
மலை
மலையினின்று வீழ்ந்து
மண்னைத் தொடும்
அருவிகள் பல..
மண்ணிலிருந்து எழுந்து
நின்று மலையேறும்
அருவி ஒன்று தான்..
ஒருத்தி தான்..
#Aruvi


Click it and Unblock the Notifications











