பர்த் டே ஸ்பெஷல்...அரவிந்த்சாமியின் தலைவி, நரகாசுரன் போஸ்டர்கள் வெளியீடு

சென்னை : டைரக்டர் விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ள படம் தலைவி. பல மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படம் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

விஷ்ணு இந்துரி, ஷைலேஷ் ஆர்.சிங் இணைந்து தயாரித்துள்ள தலைவி படம் மார்ச் மாதமே ரிலீசாக வேண்டியது. ஆனால் தமிழக தேர்தல், கொரோனா, லாக்டவுன், தியேட்டர்கள் மூடல் போன்ற பல காரணங்களால் தள்ளி போகிக் கொண்டிருக்கிறது.

அரவிந்த் சாமி பர்த் டே ஸ்பெஷல்

அரவிந்த் சாமி பர்த் டே ஸ்பெஷல்

தலைவி படத்தில் எம்ஜிஆர் ரோலில் அரவிந்த்சாமி நடித்துள்ளார். இந்நிலையில் அரவிந்த்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு, வெள்ளை சட்டை - வேட்டியில் ஸ்டெயிலாக எம்ஜிஆர்.,நிற்பது போன்ற அரவிந்த்சாமியின் போஸ்டரை தலைவி படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அருமையான தருணம்

அருமையான தருணம்

இந்த போஸ்டருடன் வாழ்த்து பதிவிட்டுள்ள விஷ்ணு இந்துரி, அரவிந்த்சாமிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். வரும் ஆண்டில் அவர் நலமுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும் வாழ இறைவன் அருள் புரியட்டும். தலைவி படத்தில் அவருடன் பணியாற்றியது அருமையான தருணம் என கேப்ஷன் பதிவிட்டுள்ளார்.

நல்ல காலம் வரும்

நல்ல காலம் வரும்

இதற்கிடையில் அரவிந்த்சாமி நீண்ட காலமாக நடித்து வரும் நரகாசுரன் படத்தின் டைரக்டர் கார்த்திக் நரேனும் இன்ஸ்டாகிராமில், படப்பிடிப்பு தளத்தில் அரவிந்த்சாமியுடன் ஆலோசனை நடத்திய போது எடுத்த ஃபோட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அத்துடன் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து, நல்ல காலம் வரும் என குறிப்பிட்டுள்ளார்.

சோனியில் ரிலீசாகும் நரகாசுரன்

சோனியில் ரிலீசாகும் நரகாசுரன்

நரகாசுரன் படம் பிரபல ஓடிடி தளமான சோனியில் ரிலீஸ் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. நரகாசுரன் படத்தில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக ஸ்ரேயா சரண் நடித்துள்ளார்.

More from Filmibeat

Read more about: aravind swamy birthday
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X