தலைவி படத்துலையும் தலைவா தான் கெத்து.. பாராட்டுக்களை அள்ளும் எம்.ஜி.ஆர் ஃ,பர்ஸ்ட் லுக் டீசர்!
Recommended Video
சென்னை: எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு தலைவி படத்தின் எம்.ஜி.ஆர் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஏ.எல். விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாக நடிக்கும் தலைவி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் டீசர் கடந்த ஆண்டு வெளியானது.
ஆனால், அந்த டீசரை பார்த்த பலரும் அனிமேஷன் படம் போல இருக்கிறது என கிண்டல் செய்தனர்.
இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள அரவிந்த் சாமியின் எம்.ஜி.ஆர் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.

ஜெயலலிதா பயோபிக்
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தலைவி படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாக நடித்து வருகிறார். எம்.ஜி.ஆர்., ரோலில் அரவிந்த் சாமி நடித்துள்ளார்.

மீண்டும் இருவர்
மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த இருவர் படம் எம்.ஜி.ஆர்., கருணாநிதி வாழ்க்கையை பிரதிபலித்து உருவக திரைப்படமாக வெளியானது. அந்த படத்தில் பிரகாஷ் ராஜ் கருணாநிதி போன்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், தலைவி படத்தில் கருணாநிதியாகவே மீண்டும் பிரகாஷ் ராஜ் நடித்து வருகிறார். சசிகலாவாக பிரியாமணி நடித்து வருகிறார்.

கடும் விமர்சனம்
தலைவி படத்தில் கங்கனா ரனாவத்தின் ஜெயலலிதா லுக் வெளியான நிலையில், கடும் விமர்சனத்தை சந்தித்தது. ஆனால், நிச்சயம் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் பயோபிக்காக உருவாகும் என தொடர்ந்து விஜய் இயக்கி வருகிறார்.
பிறந்தநாள் பரிசு
இந்நிலையில், எம்.ஜி.ஆரின் 103வது பிறந்த நாள் அன்று பிறந்த நாள் பரிசாக அரவிந்த் சாமியின் எம்.ஜி.ஆர் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. கங்கனா ரனாவத் லுக்கை விட அரவிந்த் சாமி லுக் கச்சிதமாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

எப்போ ரிலீஸ்
ஏ.எல். விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாக நடித்து வரும் தலைவி படம் இந்த ஆண்டு ஜூன் 26ம் தேதி திரைக்கு வருகிறது.

லைக்ஸ் குவித்த குயின்
கெளதம் மேனன் இயக்கத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளியான குயின் வெப்சீரிஸ் ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்றுள்ளது. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று புனைவாக குயின் வெப் சீரிஸை எடுத்து வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை பெற்று விட்டனர். தலைவி படத்தில் அதில் இல்லாத காட்சிகள் வருமா? அல்லது அதை விட சூப்பராக வருமா? என்ற எதிர்பார்ப்பும் கூடவே கிளம்பியுள்ளன.


Click it and Unblock the Notifications











