எப்படி சார் இதெல்லாம்.. வைரலாகும் அரவிந்த்சாமியின் எம்.ஜி.ஆர். லுக்!

Recommended Video

Thalaivi : Arvind Swami's MGR look | வைரலாகும் அரவிந்த்சாமியின் எம்.ஜி.ஆர் லுக்

சென்னை: ஏ.எல். விஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு 'தலைவி' என்ற பெயரில் உருவாகி வருகிறது.

'தலைவி' ஜெயலலிதாவாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் எம்.ஜி.ஆர்., ஆக நடிகர் அரவிந்த்சாமி நடித்து வருகிறார். அவரது எம்.ஜி.ஆர். லுக் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது.

கஷ்டமா இருக்கு

தலைவி படத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வேடத்தில் பாலிவுட் நாயகி கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக தமிழ் மற்றும் பரதநாட்டியத்தை கங்கனா ரனாவத் கற்று வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், தமிழ் கற்றுக் கொள்வது மிகவும் சிரமமாக இருப்பதாக தெரிவித்தார்.

எப்படி சார் இதெல்லாம்

தலைவி படத்தில் எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் அச்சு அசலாக பொருந்தியுள்ளார் அரவிந்த்சாமி. எப்படி சார் இதெல்லாம் உங்களுக்கு அசால்ட்டா சாத்தியமாகுது என்று தான் அந்த லுக்கை பார்த்தால் கேட்கத் தோன்றுகிறது. அரவிந்த்சாமி க்ளீன் ஷேவில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வெளியாகுமா?

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தை பலரும் இயக்க முன் வந்துள்ளனர். மதராசபட்டினம், தலைவா படங்களை இயக்கிய ஏ.எல். விஜய், மிகப்பெரிய பட்ஜெட்டில் பெரிய நட்சத்திர பட்டியலுடன் இந்த படத்தை பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார். தலைவி படத்திற்கு ஜெ. தீபா எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெயிட்டிங்

வெயிட்டிங்

அரவிந்த்சாமி நடிப்பில் கடைசியாக செக்கச்சிவந்த வானம் வெளியானது. அந்த படத்தை தொடர்ந்து, சதுரங்க வேட்டை 2 மற்றும் நரகாசூரன் படங்கள் வெயிட்டிங் லிஸ்டில் இருக்கிறது. இந்த இரு படங்களும் எப்போது வெளியாகும் என அரவிந்த் சாமி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

இயக்குநர் மணிரத்னமின் பேரன்புக்குரிய நடிகரான அரவிந்த்சாமி, பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பல நட்சத்திரங்கள் நடிக்க உள்ள பிரம்மாண்ட படத்தில் அரவிந்த்சாமிக்கும் நிச்சயம் ஒரு கதாபாத்திரம் கிடைக்குமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X