'அப்படியே இருக்கீங்களே..'தலைவி படத்தில் அரவிந்த்சாமியின் புதிய, எம்.ஜி.ஆர். லுக்.வைரலாகும் போட்டோஸ்

By

சென்னை: ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையான 'தலைவி' படத்தில் எம்.ஜி.ஆரின் புதிய லுக் இன்று வெளியிடப்பட்டது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதை 'தலைவி' என்ற பெயரில் சினிமாவாக்கப்பட்டு வருகிறது.

ஏ.எல்.விஜய் இயக்கும் இந்தப் படத்தில் ஜெயலலிதாவாக, இந்தி நடிகை கங்கனா ரனவத் நடிக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ்குமார்

ஜி.வி.பிரகாஷ்குமார்

எம்.ஜி.ஆர். ஆக, அரவிந்த்சாமி, அவர் மனைவி ஜானகி ராமச்சந்திரனாக மதுபாலா நடிக்கின்றனர். ரோஜா படத்துக்கு பிறகு மதுபாலாவும் அரவிந்த் சாமியும் இதில் இணைந்துள்ளனர். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகிறது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். விஷ்ணுவர்தன் இந்தூரி, சைலேஷ் சிங் தயாரிக்கின்றனர்.

மீண்டும் தொடங்கியது

மீண்டும் தொடங்கியது


இந்தப் படத்தை கடந்த ஜூன் மாதம் 26 ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்திருந்தனர். இதுபற்றி தயாரிப்பாளர்களில் ஒருவரான, பிருந்தா பிரசாத் சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்திருந்தார். ஆனால் கொரோனா அதற்கான வாய்ப்பை வழங்கவில்லை. இந்நிலையில் கடந்த 7 மாதங்களுக்குப் பிறகு இந்த படத்தின் ஷூட்டிங் செப்டம்பர் மாதம் மீண்டும் தொடங்கியது.

விரும்பி நடித்தேன்

விரும்பி நடித்தேன்

ஐதராபாத்தில் செட் அமைத்து நடந்து வந்த இதன் படப்பிடிப்பு, சில நாட்களுக்கு முன் நிறைவடைந்தது. இதுபற்றி ட்விட்டரில் தெரிவித்த கங்கனா, 'வெற்றிகரமாக, எங்கள் கனவுத் திரைப்படமான தலைவி ஷூட்டிங்கை முடித்து விட்டோம். எந்த நடிகைக்கும் எளிதில் கிடைத்திடாத, அரிதான ரத்தமும் சதையுமான கேரக்டர் எனக்கு கிடைத்தது. நான் அதிகம் விரும்பி நடித்தேன் என்று கூறியிருந்தார்.

எம்.ஜி.ஆர். புதிய லுக்

எம்.ஜி.ஆர். புதிய லுக்

இந்நிலையில், எம்ஜிஆரின் நினைவு நாளை முன்னிட்டு அரசியல் தலைவராகவும் முதல்வராகவும் பதவியேற்ற எம்ஜிஆர் லுக்கில் இருக்கும் அரவிந்த் சாமியின் புதிய புகைப்படத்தை படக்குழு இன்று வெளியிடுவதாக அறிவித்திருந்தது. அதன்படி, எம்.ஜி.ஆர்.லுக் இன்று வெளியிடப்பட்டது.

பெரிய பொறுப்பு

பெரிய பொறுப்பு

மக்களை பார்த்து எம்.ஜி.ஆர் கையெடுத்து கும்பிடுவது, மாணவர்களுடன் சத்துணவு சாப்பிடுவது போன்ற புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. இதை வெளியிட்டுள்ள நடிகர் அரவிந்த் சாமி, எம்.ஜி.ஆர்.வேடத்தில் நடிப்பது எனக்கு கிடைத்த கவுரவம் மட்டுமல்ல, அது மிகப் பெரிய பொறுப்பு. என் மீது நம்பிக்கை வைத்ததற்காக இயக்குனர் விஜய், மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி என்று கூறியுள்ளார்.

காஸ்ட்யூம், மேக்கப்

காஸ்ட்யூம், மேக்கப்

அப்படியே இருக்கீங்க சார் என்று பல நெட்டிசன்ஸ் கூறியுள்ளனர். காஸ்ட்யூம், மேக்கப் என அனைத்தும் அருமை என்று பலர் புகழ்ந்து தள்ளியுள்ளனர். இந்தப் படத்தை பார்க்க ஆர்வமாக இருக்கிறேன் என பலர் கூறியுள்ளனர். இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X