Arvind Swamy: கைவிட்ட திரையுலகம்.. பிஸினஸில் 3300 கோடி ரூபாயை தட்டித் தூக்கிய கோலிவுட் ஹீரோ!
சென்னை: கோலிவுட்டின் ஸ்டைலிஷ் நடிகராக கலக்கி வருபவர் அரவிந்த் சாமி. தளபதி படத்தில் அறிமுகமான அரவிந்த் சாமி, நடிகராக மட்டுமில்லாமல் பிஸினஸிலும் பெரிய டான் என்பது பலருக்கும் தெரியாது.
பிஸினஸில் 3300 கோடி: மணிரத்னம் இயக்கிய தளபதி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் அரவிந்த் சாமி. முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார் நடிகர்களான ரஜினி, மம்முட்டியுடன் இணைந்து நடித்திருந்தார். ரஜினி, மம்முட்டி இருவரது அராஜகத்தையும் அடக்க நினைக்கும் கலெக்டர் கேரக்டரில் மாஸ் காட்டியிருந்தார் அரவிந்த் சாமி.

இதனைத் தொடர்ந்து மணிரத்னத்தின் அடுத்தப் படமான ரோஜாவில் ஹீரோவாக நடித்தார். இது தான் மணிரத்னம், ஏஆர் ரஹ்மான் கூட்டணியில் வெளியான முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ரோஜாவின் வெற்றிக்குப் பின்னர் அரவிந்த் சாமிக்கு மிகப் பெரிய மார்க்கெட் வேல்யூ உருவானது. அதுமட்டும் இல்லாமல் அரவிந்த் சாமிக்கு ஏராளமான ரசிகைகள் பட்டாளமும் உருவானது.
ஒருகட்டத்தில் அரவிந்த் சாமி மாதிரி மாப்பிள்ளை வேண்டும் என்பது 90ஸ் ரசிகைகளின் கோரிக்கையாக இருந்தது. ரோஜா படத்தைத் தொடர்ந்து இந்திரா, புதையல், என் சுவாசக் காற்றே என பல படங்களில் நடித்த அரவிந்த் சாமி, திடீரென சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தார். அவ்வப்போது படங்களில் நடித்தாலும் தனி ஒருவன் தான் அவருக்கு மிகப் பெரிய கம்பேக் படமாக அமைந்தது.
அதேநேரம் சினிமாவில் இருந்து ஃபீல்ட் அவுட் ஆகியிருந்த அரவிந்த் சாமி, 2000 முதல் 2005ம் ஆண்டு வரை அவரது அப்பாவின் பிஸினஸில் கவனம் செலுத்தினார். பிஸினஸில் அதிக ஆர்வம் கொண்ட அரவிந்த் சாமி, குறைந்த நாட்களில் அவரது கம்பெனியை உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளார். அதாவது 3300 கோடி ரூபாய் வரை டர்ன் ஓவர் செய்துள்ளார் அரவிந்த் சாமி. இதன்மூலம் அவரும் பல கோடிகளை சம்பாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதனால் இப்போதும் சினிமாவில் நடித்தாலும் தொடர்ந்து பிஸினஸில் கவனம் செலுத்தி வருகிறாராம். அரவிந்த் சாமியை நடிகராக மட்டுமே தெரிந்து வைத்திருந்த ரசிகர்கள், அவருக்கு இன்னொரு முகம் இருக்கிறது என்பதை அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.


Click it and Unblock the Notifications











