Arvind Swamy Net Worth: ரோஜா நாயகனுக்கு பிறந்தநாள்.. அரவிந்த் சாமியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
சென்னை: நடிகர் அரவிந்த் சாமி இன்று தனது 53வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது சொத்து மதிப்பு, சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
செக்கச் சிவந்த ரோஜாவாகவே அழகிய முகத்துடன் ஹேண்ட்ஸம் ஹங்காக இந்த வயதிலும் சினிமாவில் நடித்து மிரட்டி வருகிறார் அரவிந்த் சாமி.
அரவிந்த் சாமி மாதிரி ஒரு மாப்பிள்ளையை தங்கள் மகளுக்கு பார்க்க வேண்டும் என பல அப்பாக்கள் இன்னமும் ஏங்கி தவித்து வருகின்றனர்.
53வது பிறந்தநாள்: 1970ம் ஆண்டு ஜூன் 18ம் தேதி சென்னையில் பிறந்தவர் நடிகை அரவிந்த் சாமி. மணிரத்னம் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மம்மூட்டி நடித்த தளபதி படத்தில் அறிமுகமான அரவிந்த் சாமியின் நடிப்பை பார்த்து அசந்து போன மணிரத்னம் அடுத்ததாக ரோஜா படத்தில் அரவிந்த் சாமியை ஹீரோவாகவே மாற்றினார்.
பம்பாய், இந்திரா, அலைபாயுதே, கடல், செக்கச் சிவந்த வானம் என தொடர்ந்து பல படங்களில் மணிரத்னத்துடன் இணைந்து பணியாற்றி உள்ளார்.

ஹீரோ டு வில்லன்: தொடர்ந்து ஹீரோ வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், சில ஆண்டுகள் பிசினஸ் பக்கம் ஆர்வம் செலுத்தத் தொடங்கிய அரவிந்த் சாமியின் தோற்றம் எல்லாமே மாறிப் போன நிலையில், வெளியான புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தின.
ஆனால், திடீரென தனி ஒருவன் படத்தில் சித்தார்த் அபிமன்யூவாக வெறித்தனமான வில்லனாக கம்பேக் கொடுத்த அரவிந்த் சாமி ஜெயம் ரவிக்கு வில்லனாக மீண்டும் போகன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடித்த கஸ்டடி படத்திலும் நெகட்டிவ் ஷேடில் நடித்துள்ளார் அரவிந்த் சாமி. அந்த படத்தில் ஒரே ஆறுதலான விஷயமே அரவிந்த் சாமியின் ஒன்லைனர் தான் என படத்தை பார்த்த பலரும் பாராட்டினர்.

அரவிந்த் சாமி குடும்பம்: 1994ம் ஆண்டு காயத்ரி ராமமூர்த்தி என்பவரை திருமணம் செய்துக் கொண்ட அரவிந்த் சாமி 2010ல் அவரை விவாகரத்து செய்தார். அதன் பின்னர், 2012ம் ஆண்டு அபர்ணா முகர்ஜி என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.
அரவிந்த் சாமிக்கும் காயத்ரிக்கும் 1996ம் ஆண்டு ஆதிரா எனும் பெண் குழந்தையும் 2000ம் ஆண்டு ருத்ரா எனும் ஆண் குழந்தையும் பிறந்தது குறிப்பிடத்தக்கது.

சொத்து மதிப்பு: தலைவி படத்தில் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் அரவிந்த் சாமி அதிகபட்சமாக 3 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக கூறப்பட்டது. தற்போது படத்துக்கு ஏற்றவாறு சம்பளம் வாங்கி வருகிறாராம் அரவிந்த் சாமி.
சினிமா மற்றும் பிசினஸ் என செல்வ செழிப்புடன் வாழ்ந்து வரும் அரவிந்த் சாமி ஒட்டுமொத்தமாக 150 கோடிக்கு சொந்தக்காரராக இருக்கிறார் என்றும் சென்னையில் அவருக்கு சொந்தமாக ஒரு வீடு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











