அதே ஸ்டைல்.. எம்ஜிஆர் நினைவு நாளை முன்னிட்டு வெளியாகவுள்ள அரவிந்த் சாமியின் புது லுக்!
சென்னை: இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவாகி உள்ள தலைவி படத்தின் எம்.ஜி.ஆர் புது லுக் நாளை வெளியாகிறது.
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பயோபிக்கில் நடித்துள்ளார்.
எம்ஜிஆராக அரவிந்த் சாமி தலைவி படத்தில் நடித்துள்ள நிலையில், நாளை புது லுக்கை வெளியிடுகிறது படக்குழு.

தலைவி ஜெயலலிதா
அம்மா என தமிழக மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட நடிகையும் முன்னாள் தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து ஏகப்பட்ட இயக்குநர்கள் அவரது வாழ்க்கை வரலாற்றை படங்களாக வெப்சீரிஸ்களாக எடுக்க முயற்சி செய்து வருகின்றனர். ஏ.எல். விஜய் இயக்கத்தில் தலைவி படம் தயாராகி உள்ளது.

பாலிவுட் நடிகை
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவாக பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். அவரது ஃபர்ஸ்ட் லுக் புகைப்படங்கள் மற்றும் ஜெயலலிதா டீசர் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தலைவி படத்தின் ஷூட்டிங்கையும் கங்கனா முடித்ததாக அறிவித்திருந்தார்.

எம்ஜிஆர் ஃபர்ஸ்ட் லுக்
இந்த ஆண்டு ஜனவரி 17ம் தேதி எம்ஜிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு தலைவி படக்குழு நடிகர் எம்ஜிஆராக அரவிந்த் சாமி இருக்கும் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு வைரலாக்கியது. மேலும், படத்தில் இடம்பெற்ற வீடியோ பாடலின் டீசரும் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

எம்ஜிஆர் நினைவு நாள்
இந்நிலையில், நாளை மக்கள் திலகம் எம்ஜிஆரின் நினைவு நாளை முன்னிட்டு அரசியல் தலைவராகவும் முதல்வராகவும் பதவியேற்ற எம்ஜிஆர் லுக்கில் இருக்கும் அரவிந்த் சாமி இருக்கும் புதிய புகைப்படத்தை தலைவி படக்குழு நாளை காலை 10 மணிக்கு ரிலீஸ் செய்யப் போவதாக அரவிந்த் சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

அதே ஸ்டைல்
மக்கள் வெள்ளத்தை பார்த்து புரட்சித் தலைவர் எம்ஜிஆர் எப்படி இரட்டை இலை சின்னத்தை பிரபலப்படுத்தும் வகையில் தனது இரு விரல்களை நீட்டி கை அசைத்தாரோ, அதே ஸ்டைலில் அப்படியே அரவிந்த் சாமி இருக்கும் பேக் போஸ் புகைப்படம் தற்போது வெளியாகி எம்ஜிஆர் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

கங்கனாவின் பேக் போஸ்
அரவிந்த் சாமியின் எம்ஜிஆர் லுக் பேக் போஸ் வைரலாகி வரும் நிலையில், தலைவியாக நடித்த நடிகை கங்கனா ரனாவத்தின் பேக் போஸ் சமூக வலைதளத்தில் தீயாக பரவி வருகிறது. மெக்ஸிகோவுக்கு டூர் சென்றுள்ள கங்கனா ரனாவத் பிகினி உடையில் கடறகரையில் அமர்ந்திருக்கும் பேக் போஸை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வைரலாக்கி உள்ளது குறிபிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











