தலைவி படத்தில் எம்.ஜி.ஆராக மாறிய அரவிந்த் சாமி

தலைவி படத்தில் தலைவராக அரவிந்த் சாமி

Recommended Video

ஜெயலலிதாவாக நடிக்க போகும் நடிகை யார் தெரியுமா?- வீடியோ

சென்னை: இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படமான தலைவி திரைப்படத்தில், எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் அரவிந்த் சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதை படக்குழுவும் உறுதி செய்துள்ளது. முன்னதாக ஜெயலலிதா கதாபாத்திரத்திற்கு கங்கனா ரனாவத் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மதராசபட்டினம், தெய்வதிருமகள், தலைவா, சைவம், தேவி போன்ற பல வெற்றிப்படங்களை இயக்கியவர் ஏ.எல்.விஜய். இவர் தற்போது தமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை எடுத்து வருகிறார்.

Arvind Swamy play as a M.G.R in Thalaivi Movie

தமிழ், தெலுங்கு, இந்தி என மும்மொழிகளிலும் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்த வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில், ஜெயலலிதா கதாபாத்திரத்திற்கு ஏற்கனவே கங்கனா ரனாவத் தேர்வாகி உள்ளது அனைவருக்கும் தெரியும்.

இதற்கிடையில், இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் எம்.ஜி.ஆராக நடிக்க போவதை படக்குழு உறுதி செய்துள்ளது. கடைசியாக அரவிந்த் சாமி மணிரத்னம் இயக்கத்தில் செக்க சிவந்த வானம் படத்தில் நடித்து இருந்தார்.

அந்த திரைப்படத்திற்கு பின், இப்படத்தில் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்திற்கு தேர்வாகி இருப்பது ரசிகர்கள் மத்தியில் டபுள் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இப்படம் மும்மொழிகளில் எடுக்கப்படுவதாலும், படத்திற்கு பெரிய நடிகர்கள் தேவை ஏற்பட்டுள்ளதன் காரணமாகவும் படத்தில் அரவிந்த் சாமி இணைந்துள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

அரவிந்த் சாமி சிறந்த நடிகர் என்பதோடு நில்லாமல், அவர் காரணம் இல்லாமல் எந்த படத்தையும் தேர்வு செய்வதில்லை. அரவிந்த் சாமி கதைகளில் அதிக கவனம் செலுத்துவார். அதே நேரத்தில் விஜய் அடிப்படையில் ஒரு விளம்பரப்பட இயக்குனர். அதனால் அவர் கதையை காட்டிலும் ஒரு படத்தின் மேக்கிங்கிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்.

அதனாலே அவரின் கடைசி இரு படங்களான தேவி 2, லஷ்மி தோல்வி அடைந்தது. தற்போது இவர்கள் இணைந்து பணியாற்றுவது கட்டாயம் புது முயற்சியாகவே இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X