வில்லனைத் தொடர்ந்து 'இளவரசனாக' மாறும் அரவிந்த் சாமி?
சென்னை: வளர்ந்து வரும் போகன் படத்தில், அரவிந்த் சாமி இளவரசனாக நடிக்கப் போகிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
'ரோமியோ ஜூலியட்' புகழ் லட்சுமணன் இயக்கத்தில், ஜெயம் ரவி, ஹன்சிகா, அரவிந்த் சாமி, அக்ஷரா கவுடா நடித்து வரும் படம் போகன்.

தனி ஒருவனைத் தொடர்ந்து ஜெயம் ரவி, அரவிந்த் சாமி மற்றும் ரோமியோ ஜூலியட்டுக்குப் பின் ஜெயம் ரவி, லட்சுமணன், ஹன்சிகா கூட்டணி மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளது.
இதனால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு அபரிமிதமான எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் தனி ஒருவன் படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாக ரசிகர்களை மிரட்டிய அரவிந்த் சாமி, இதில் இளவரசன் வேடத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதில் ஜெயம் ரவி, அக்ஷரா கவுடா இருவரும் போலீஸ் வேடத்தில் நடித்து வருகின்றனர். வழக்கம் போல ஹன்சிகா, ஜெயம் ரவியின் காதலியாக நடிக்கிறார்.
எங்கேயும் காதல், ரோமியோ ஜூலியட் படங்களைத் தொடர்ந்து, ஜெயம் ரவி- ஹன்சிகா ஜோடி மூன்றாவது முறையாக இப்படத்தில் இணைந்துள்ளது.
தன்னுடைய 'பிரபுதேவா ஸ்டுடியோஸ்' சார்பில் பிரபுதேவா தயாரிக்கும் இப்படத்திற்கு, டி.இமான் இசையமைக்கிறார்.


Click it and Unblock the Notifications











