எஸ் ஜே சூர்யாவிற்கு பதில் முதலில் தேர்வான நடிகர் இவர்தான்... வெங்கட் பிரபு சுவாரசிய தகவல்!

சென்னை: இயக்குனர் வெங்கட் பிரபுவின் வித்தியாசமான படைப்பில் உருவான மாநாடு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப் படுகிறது.

Recommended Video

Maanadu மாஸ்! தெறிக்க விடுகிறார்..Simbu..ரசிகர்கள் கொண்டாட்டம் | Tamil Filmibeat

நடிகர் சிம்பு இந்த படத்தில் அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்துள்ளார்.

எதிர்பார்த்ததை விடவும் ஒரு படி மேலாக மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்திய எஸ் ஜே சூர்யாவின் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தவர் பிரபல நடிகர் என இயக்குனர் வெங்கட்பிரபு சுவாரசியமான தகவல் ஒன்றை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

சயின்ஸ் பிக்சன் கதையை

சயின்ஸ் பிக்சன் கதையை

இயக்குனர் வெங்கட்பிரபு திரைப்படங்கள் என்றாலே அதற்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கும் அந்த அளவுக்கு படம் முழுவதும் செம ஜாலியாக போகும். எந்த ஒரு தொய்வும் இல்லாமல் குடும்பத்துடன் கண்டுகளிக்கும் காமெடி படங்களை இயக்கியவர் இப்போது புது விதமான சயின்ஸ் பிக்சன் கதையை கையில் எடுத்துள்ளார். டைம் லூப் என்ற பாணியை கையிலெடுத்து இப்பொழுது மாநாடு படத்தை இயக்கியுள்ளார்.

மாநாடு

மாநாடு

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாநாடு படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது அதன் பிறகு படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்தது. அதனால் சிம்புவுக்கும் தயாரிப்பு குழுவுக்கும் மிகப் பெரிய பிரச்சினை ஏற்பட்டது . இந்த நிலையில் கடந்த ஆண்டு அனைத்து பிரச்சனைகளும் முடிந்து விறுவிறுப்பாக நடைபெற்ற மாநாடு தற்போது வெற்றிகரமாக ரிலீசாகியுள்ளது.

பாசிட்டிவான விமர்சனங்கள்

பாசிட்டிவான விமர்சனங்கள்

அரசியல்,சயின்ஸ் பிக்ஷன், த்ரில்லர் என அனைத்தும் கலந்த வித்தியாசமான படைப்பை இயக்குனர் வெங்கட்பிரபு அளித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்பு படம் வெளியாவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்க மாநாடு வெளியான நாள் முதலே பெரும் ஆதரவு இருந்து வருகிறது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் படத்திற்கு தொடர்ந்து பாசிட்டிவான விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கிறது.

எஸ் ஜே சூர்யாவின் அபார நடிப்பு

எஸ் ஜே சூர்யாவின் அபார நடிப்பு

சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா,எஸ் ஏ சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி அமரன், வைய் ஜி மகேந்திரன்,மனோஜ் பாரதிராஜா, அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருக்க இதில் வில்லனாக நடித்த எஸ் ஜே சூர்யா வின் அபார நடிப்பு ரசிகர்களை மிகவும் வியக்க வைத்துள்ளது.

முதலில் அரவிந்த்சாமியை

முதலில் அரவிந்த்சாமியை

படத்திற்கு படம் ரசிகர்கள் எதிர்பார்த்ததை விடவும் ஒரு படி கூடுதலாக நடிப்பில் மிரட்டும் எஸ் ஜே சூர்யா மாநாடு படத்தில் வழக்கம்போல பிச்சு உதறி உள்ளார். எஸ் ஜே சூர்யாவின் தனுஷ்கோடி கதாபாத்திரம் ரசிகர்களை அதிகமாக ரசிக்க வைத்துள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் வெங்கட் பிரபு கூறியதாவது. எஸ் ஜே சூர்யாவின் தனுஷ்கோடி கதாபாத்திரத்திற்கு முதலில் அரவிந்த்சாமியை ஒப்பந்தம் செய்ய இருந்தனர். ஆனால் ஒரு சில காரணங்களால் கடைசியாக எஸ் ஜே சூர்யா ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த சுவாரஸ்யமான தகவல் இப்பொழுது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X