twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    "முத்தக்காட்சி வைக்கிறதுக்கே படாதபாடு படவேண்டியதா இருக்கு..." - அரவிந்த்சாமி ஃபீலிங்!

    By Vignesh Selvaraj
    |

    Recommended Video

    'முத்தக்காட்சி வைக்கிறதுக்கே படாதபாடு படவேண்டியதா இருக்கு...' - அரவிந்த்சாமி ஃபீலிங்!- வீடியோ

    சென்னை : சென்னையில் 15-வது சர்வதேச திரைப்பட விழா நேற்று துவங்கியது. ஒரு காலத்தில் பெண்களின் கனவுக் கண்ணனாகத் திகழ்ந்த நடிகர் அரவிந்த்சாமி சென்னை திரைப்பட விழாவைத் துவக்கி வைத்தார்.

    விழாவைத் துவக்கி வைத்த அவர் பேசியதாவது, "நிதியில்லாமல் மிகவும் சிரமப்பட்டு இந்த திரைப்பட விழாவை நடத்துகிறார்கள். அவர்களுக்கு நான் துணையாக நிற்பேன். தமிழ் சினிமாவில் படம் எடுப்பது எளிது சென்சார் சான்றிதழ் வாங்குவதுதான் கடினமாக இருக்கிறது.

    Arvindswamy about kiss scenes in tamil cinema

    2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தாம்பத்திய உறவு பற்றி நம் முன்னோர்கள் எழுதியிருக்கிறார்கள். ஆனால் இப்போது சினிமாவில் ஒரு முத்தக்காட்சி வைப்பதற்கே சிரமப்பட வேண்டியது இருக்கிறது. காதல் காட்சிகளை விட பெண்களுக்கு எதிரான வன்முறைக் காட்சிகளே படங்களில் அதிகம் இடம் பெறுகின்றன" எனப் பேசினார்.

    நேற்று தொடங்கிய இந்தத் திரைப்படத் திருவிழா வரும் டிசம்பர் 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. சென்னை அண்ணா சாலையில் இருக்கும் சில தியேட்டர்களிலும், கலாச்சார மையங்களிலும் படங்கள் திரையிடப்படுகின்றன.

    திரைப்பட விழாவுக்கு தமிழக அரசு நிதி அளிக்காதது திரையுலகினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. அடுத்த ஆண்டாவது அரசு நிதி அளித்து ஊக்கம் கொடுத்தால் மட்டும் மிகச் சிறப்பாக திரை விழாவை நடத்த முடியும் என்பதே சினிமாக்காரர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

    English summary
    The 15th International Film Festival in Chennai began yesterday. Actor Arvindswamy, who started the ceremony, said: "Our ancestors wrote about kamasutra 2,000 years ago, but now we have a difficult time to take a kiss in cinema, and there are more violent scenes in the film than the romantic scenes."
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X