வாரணாசியில் நடிகர் ஆர்யா கைது-தீவிரவாதி என சந்தேகம்

By Staff

நான் கடவுள் படப்பிடிப்பின் போது நடிகர் ஆர்யாவை தீவிரவாதி என நினைத்து வாரணாசி போலீஸார் கைது செய்தனர்.

பாலாவின் இயக்கத்தில் உருவாகி வரும் நான் கடவுள் படப்படிப்பு தற்போது காசியில் நடந்து வருகிறது. இந்த படத்திற்காக ஆர்யா நீண்ட தலைமுடி, தாடி வளர்த்துள்ளார். தற்போது காசியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

வாராணசியில் வெளியே சென்ற ஆர்யாவை பார்த்த போலீஸார் அவர் மீது சந்தேகமடைந்து அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று சிறை வைத்தனர். அவரிடம் உயர் அதிகாரிகள் ஆர்யாவிடம் விசாரணை நடத்தினர்.

அவர்களிடம் ஆர்யா, தான் ஒரு தமிழ் நடிகர் என்றும் படப்பிடிப்புக்காக வாரணாசி வந்ததையும் விளக்கினார். ஆனால் இதை போலீசார் நம்பவில்லை. இதுகுறித்து நான் கடவுள் படக்குழுவினர் தகவல் அறிந்து காவல் நிலையத்திற்கு வந்து ஆதாரங்களை காட்டி பின்னர் ஆர்யாவை அழைத்துச் சென்றனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னை அமெரிக்கத் தூதரகத்தில் விசா வாங்க சென்ற ஆர்யாவை பார்த்த அதிகாரிகள் அவரது தோற்றத்தை பார்த்து சந்தேகமடைந்து அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர் அவர்களிடம் தான் ஒரு நடிகன் என்று விளக்கி பின் அவர்களிடம் இருந்து தப்பி வந்தார்.

இப்போது வாரணாசியிலும் அதே பிரச்சனையை சந்தித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X