ஆர்யாவின் 30வது படம்…டைட்டில் மற்றும் பஸ்ர்ட் லுக் நாளை வெளியாகிறது!

சென்னை : இயக்குனர் ரஞ்சித் இயக்கி தயாரிக்கும் அடுத்த படத்தில் ஆர்யா, சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.

#ஆர்யா30 என்று பெயரிடப்படாமல் எடுத்து வந்த இந்த படத்தின் தலைப்பு & பஸ்ர்ட் லுக் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

பா. ரஞ்சித்தின் வெற்றி வரிசையில் இந்த படமும் கண்டிப்பாக இடம் பிடிக்கும் என திரையுலக ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்யாவிற்கு சாதகமான படம்

ஆர்யாவிற்கு சாதகமான படம்

பா. ரஞ்சித் அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா போன்ற வெற்றி படங்களை இயக்கியவர். இதையடுத்து ஆர்யாவை வைத்து எடுக்கவுள்ளார். இந்த படங்கள் அனைத்தும் அந்தந்த நடிகர்களின் திரையுலக பயணத்தில் முக்கியமான படமாகவே அமைந்துள்ளது. அது போல இந்த படமும் ஆர்யாவிற்கு கண்டிப்பாக சாதகமாக படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியமான படமும் கூட

முக்கியமான படமும் கூட

நடிகை சஞ்சனா நடராஜன் தமிழில் இறுதி சுற்று, 2.0 போன்ற படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார். அடுத்த ஆண்டு வெளிவரவிருக்கும் ஜகமே தந்திரம் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் சஞ்சனா. அதை தொடர்ந்து இந்த படத்தில் நடித்துள்ளார். பொதுவாக பா. ரஞ்சித் தனது படங்களில் கதாநாயகிகளுக்கு முக்கிய பங்கு அளித்திருப்பார் அதுபோல இந்த படத்திலும் சஞ்சனாவிற்கு முக்கிய பங்கு இருக்கும். ஜகமே தந்திரம், ஆர்யா30 படங்களின் வழியாக சஞ்சனா அடுத்தடுத்து படவாய்ப்புகளை பெற வாய்ப்புகள் உள்ளது.

தரமான படங்கள்

தரமான படங்கள்

பரியேறும் பெருமாள், இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு போன்ற தரமான படங்களை தயாரித்த பா. ரஞ்சித் இந்த படத்தையும் தனது நீலம் ப்ரொடக்ஷன் வாயிலாக தயாரித்து வெளியிடவுள்ளார்.

Recommended Video

ஆர்யாதான் என்ன HERO வா நடிக்க வச்சது | DIRECTOR SANTOSH P JAYAKUMAR CHAT PART-01| FILMIBEAT TAMIL
அரசியல் சாயல் இருக்குமா?

அரசியல் சாயல் இருக்குமா?

இந்த படத்திற்காக நடிகர் ஆர்யா உடல் எடையை ஏற்றி பாக்ஸிங் பயிற்சி செய்யும் புகைப்படங்கள் முன்னர் ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் ட்ரெண்ட் ஆனது. ரஞ்சித்தின் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ், கபாலி, காலா படங்களில் அரசியல் சாயல் மிகுந்தே காணப்பட்டது அது போல இதில் பாக்ஸிங் விளையாட்டில் உள்ள அரசியல் பற்றிய சாயல் இருக்குமா என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு உள்ளது.

More from Filmibeat

Read more about: arya 30 first look
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X