»   »  இமேஜ் கெடக்கு: விஷாலுக்காக துணிந்து அதிரடி முடிவு எடுத்த ஆர்யா

இமேஜ் கெடக்கு: விஷாலுக்காக துணிந்து அதிரடி முடிவு எடுத்த ஆர்யா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நண்பன் விஷாலுக்காக இரும்புத் திரை படத்தில் வில்லனாக நடிக்க ஆர்யா ஒப்புக் கொண்டுள்ளார்.

விஷால் மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை தயாரிப்பதும் அவர் தான். இந்நிலையில் அவர் புதுமுக இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் இரும்புத் திரை படத்தில் நடிக்க உள்ளார்.

இரும்புத் திரை படத்தை அவர் தனது விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரிக்கிறார்.

சமந்தா

சமந்தா

இரும்புத் திரை படம் மூலம் முதன்முதலாக விஷாலுடன் ஜோடி சேர்கிறார் சமந்தா. பார்த்து பார்த்து படங்களை தேர்வு செய்து வரும் சமந்தா விஷாலுக்கு ஓகே சொல்லியுள்ளார்.

ஆர்யா

ஆர்யா

விஷாலுக்கு வில்லனாக நடிக்க ஆர்யாவிடம் கேட்டுள்ளனர். அவரும் நண்பனுக்காக வில்லனாக நடிக்க சம்மதித்துள்ளார். ஆர்யா முதல் முறையாக தமிழ் படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

அல்லு அர்ஜுன்

அல்லு அர்ஜுன்

ஆர்யா முன்னதாக அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடித்த தெலுங்கு படமான வருடுவில் வில்லனாக நடித்துள்ளார். இந்நிலையில் அவர் தமிழ் படத்திலும் வில்லனாகப் போகிறார்.

யுவன்

யுவன்

இரும்புத் திரைக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். பிற நடிகர்கள், நடிகைகள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும். படப்பிடிப்பு நாளை துவங்க உள்ளது.

English summary
Arya has agreed to act as good friend Vishal's villain in his upcoming movie Irumbu Thirai.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos