ஆர்யா, கெளதம் ராம் கார்த்திக்கு கம்பேக் படமாக அமையுமா மிஸ்டர் எக்ஸ்?.. மனு ஆனந்த் மீது நம்பிக்கை!
சென்னை: விஷ்ணு விஷாலை வைத்து இயக்குநர் மனு ஆனந்த் இயக்கிய FIR திரைப்படமே படு மிரட்டலாக இருந்தது. ராஜ் மற்றும் டிகே இயக்கிய தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் போல பரபரப்புக்கு பஞ்சமே இல்லாத ஸ்பை த்ரில்லர் படமாக அந்த படம் உருவாகி இருந்தது.
துரந்தர் படத்துக்கு எல்லாம் முன்னோடி போல அந்த படம் இருந்த நிலையில், மிஸ்டர் எக்ஸ் திரைப்படமும் ஸ்பை த்ரில்லர் படமாகவே மனு ஆனந்த் உருவாக்கியுள்ளார்.

ஏப்ரல் 17ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள மிஸ்டர் எக்ஸ் திரைப்படம் ஆர்யா மற்றும் கெளதம் ராம் கார்த்திக்கு கம்பேக் படமாக அமையுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
ஆர்யாவுக்கு தொடர் தோல்வி: சார்பட்டா பரம்பரை 2 திரைப்படம் தான் கடைசியாக ஆர்யா நடித்து வெளியான சூப்பரான படம் என ரசிகர்கள் கொண்டாடினர். அந்த படமும் ஓடிடி தளத்திலேயே வெளியானது. அதன் பின்னர், ஆர்யா நடித்து வெளியான அரை டஜன் படங்கள் படுதோல்வியை சந்தித்தன. அரண்மனை 3, கேப்டன், காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் என அனைத்து படங்களுமே அட்டு ஃபிளாப் தான். இந்நிலையில், மிஸ்டர் எக்ஸ் திரைப்படத்துக்கு ஆர்யாவால் ஓபனிங் வரவில்லை என்றாலும் படம் நல்லா இருந்தா கண்டிப்பாக வெற்றி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
கெளதம் ராம் கார்த்திக் கம்பேக் கொடுப்பாரா?: கெளதம் ராம் கார்த்திக் என தனது பெயரை கெளதம் கார்த்திக் மாற்றிக் கொண்ட நிலையில், 96 கிலோவில் இருந்து ஃபிட்டாகவும் பாடி பில்டராகவும் பக்காவாக மிஸ்டர் எக்ஸ் படத்துக்காக கடும் உழைப்பை நடிகர் கெளதம் ராம் கார்த்திக் போட்டுள்ளார். மனு ஆனந்த் மீது இருவரும் நம்பிக்கை வைத்து இந்த படத்துக்காக கடுமையாக உழைத்திருப்பதை பார்க்க முடிகிறது. அண்டர்வாட்டரில் ஆர்யாவும், உடல் எடையை ஃபிட்டாக மாற்ற கெளதம் ராம் கார்த்திக்கும் உழைத்திருப்பது கண்டிப்பாக படத்தின் ரிசல்ட்டுக்கு உதவும் என்றே தெரிகிறது.
மஞ்சு வாரியர் மிராடப்போகிறார்: ஆர்யா மற்றும் கெளதம் ராம் கார்த்திக் மட்டுமின்றி இந்த படத்தில் மஞ்சு வாரியரையும் ஆக்ஷன் அவதாரத்தில் களமிறக்கியிருக்கிறார் மனு ஆனந்த். துணிவு படத்தில் பார்த்ததை போல இந்த படத்திலும் அவர் ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரம் வெளியான லவ் இன்சூரன்ஸ் கம்பெனி இந்த வாரமும் ஓடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மிஸ்டர் எக்ஸ் படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்தால் இந்த படமும் வசூல் வேட்டை நடத்தும்.


Click it and Unblock the Notifications