ஒவ்வொரு நாளையும் சிறப்பான நாளாக்கிய மனைவிக்கு நன்றி… திருமணநாள் வாழ்த்து கூறிய ஆர்யா !

சென்னை : தமிழ் சினிமாவில் இளம் நட்சத்திர கப்புலாக இருக்கும் நடிகர் ஆர்யா மற்றும் சாயிஷா ஜோடி நேற்று இரண்டாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடியுள்ளனர்.

காப்பான் படத்திற்கு பிறகு மீண்டும் ஆர்யா, சாயிஷா இணைந்து நடித்துள்ள டெடி திரைப்படம் மிக விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது.

திருமணத்திற்குப் பிறகும் இருவரும் திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வர இரண்டாம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு செம க்யூட்டான புகைப்படத்தை இருவரும் பதிவிட்டு தங்களது அன்பை பரிமாறிக் கொண்டுள்ளனர்.

யாரை கை பிடிப்பார்

யாரை கை பிடிப்பார்

பல ஆண்டுகளாகவே சிங்கிளாக வாழ்ந்து வந்த ஆர்யா தனக்கேற்ற ஜோடியை தேர்ந்தெடுப்பதற்காகவே தனியாக ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஷோ ஒன்றை நடத்தி அதிலிருந்து தேர்ந்தெடுக்க முயற்சி செய்தார். இறுதியாக யாரைத்தான் அந்த நிகழ்ச்சியிலிருந்து கை பிடிப்பார் என ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்க போட்டியாளராக கலந்து கொண்ட பெண்கள் யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் டேக்கா கொடுத்து விட்டு இளம் நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

திருமணம் செய்து கொண்டனர்

திருமணம் செய்து கொண்டனர்

கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி ஆர்யா சாயிஷா ஜோடி இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகும் இருவரும் இணைந்து காப்பான் மற்றும் டெடி ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்க இதில் டெடி திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது. இந்த நிலையில் நேற்று மார்ச் 10ஆம் தேதியுடன் இந்த நட்சத்திர ஜோடிக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது.

இரண்டாம் ஆண்டு திருமண நாள்

இரண்டாம் ஆண்டு திருமண நாள்

திருமணம் ஆனது முதல் பல க்யூட்டான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அனைவரும் பொறாமைப்படும் வகையில் தமிழ் சினிமாவின் இளம் நட்சத்திர ஜோடியாக உள்ள சாயிஷா மற்றும் ஆர்யா இரண்டாம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட ரொமான்டிக் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு அன்பைப் பரிமாறிக் கொண்டுள்ளனர்.

இதேபோல எப்போதும் காதலிப்பேன்

இதேபோல எப்போதும் காதலிப்பேன்

நடிகை சாயிஷா கணவர் ஆர்யாவுடன் கன்னத்தோடு கன்னம் ஒட்டி இருக்க சமீபத்தில் வெளிநாடு சென்ற இடத்தில் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படத்தை பதிவிட்டதோடு " நான் உங்களை இப்போது போல எப்போதும் காதலிப்பேன்.. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் என்னுடைய ஜான் " என சாயிஷா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் .

அன்பை மாறி மாறி

அன்பை மாறி மாறி

நடிகர் ஆர்யாவும் ட்விட்டர் பக்கத்தில் " என்னுடைய வாழ்வில் ஒவ்வொரு நாளையும் சிறப்பான நாளாக ஆக்கிய மனைவிக்கு நன்றி.. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் மனைவியே " என இருவரும் தங்களது அன்பை மாறி மாறி பரிமாறிக் கொண்டு இரண்டாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடும் இந்த க்யூட் புகைப்படத்திற்கு லைக்குகள் லட்சக்கணக்கில் குவிந்த வர ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X