Don't Miss!
- News கட்டுக்கதை அவிழ்த்து விடுறாங்க.. குடும்பத்தினரை பற்றி அவதூறு பரப்புறாங்க.. சசிகாந்த் செந்தில் பளீர்
- Education தமிழக கல்லூரி மாணவர் பதிவு விண்ணப்ப சாளரத்தில் மாற்றம்...!
- Lifestyle இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Technology பொளக்குது ஆர்டர்.. ரூ.7,599 பட்ஜெட்ல 12GB ரேம்.. அல்ட்ரா பிரீமியம் கேமரா லுக்.. 1டிபி மெமரி.. எந்த மாடல்?
- Automobiles ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
உலகத்துலயே ஆபத்தானவன் யார் தெரியுமா? ஆர்யா, விஷால் அதிரடியில் வெளியான எனிமி டீசர்!
சென்னை: இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி உள்ள எனிமி படத்தின் அட்டகாசமான டீசர் வெளியாகி உள்ளது.
அவன் இவன் படத்தைத் தொடர்ந்து ஆர்யா மற்றும் விஷால் எனிமி படத்தில் இணைந்து மிரட்ட உள்ளனர்.
முன்னழகை கைகளால் மறைத்து.. க்யூட் ப்ராக்கில் பட்டர்ஃபிளை போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!
கேஜிஎஃப் காம்போவான மாளவிகா அவினாஷ் மற்றும் பிரகாஷ் ராஜ் இந்த படத்திலும் நடித்துள்ளனர்.
ஆர்யாவின் அடுத்த படம்
டெடி, சார்பட்டா பரம்பரை என அசத்தி வரும் நடிகர் ஆர்யா அடுத்ததாக வில்லன் அவதாரம் எடுத்துள்ள எனிமி படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. விஷால் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு வில்லனாக ஆர்யா நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளார்.
முருகதாஸ் சிஷ்யன்
துப்பாக்கி மற்றும் 7ஆம் அறிவு உள்ளிட்ட படங்களில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸின் உதவி இயக்குநராக பணியாற்றியவர் இயக்குநர் ஆனந்த் ஷங்கர். விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான அரிமா நம்பி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இருமுகன், நோட்டா படங்களை தொடர்ந்து எனிமி படத்தை இயக்கி உள்ளார்.
எனிமி டீசர்
ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் ஆர்யா மற்றும் விஷால் இணைந்து நடித்துள்ள எனிமி படத்தின் அதிரடியான டீசர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த படத்தின் ஏகப்பட்ட காட்சிகள் துபாயில் படமாக்கப்பட்டுள்ளது. இருமுகன் படத்தைத் தொடர்ந்து வெளிநாட்டிலேயே அதிகளவில் இந்த படத்தை படமாக்கி உள்ளார் ஆனந்த் ஷங்கர்.
கேஜிஎஃப் காம்போ
கேஜிஎஃப் 2 படத்தில் பிரகாஷ் ராஜ் நடித்துள்ள நிலையில், அதே கெட்டப்பில் இந்த படத்திலும் நடித்துள்ளார். மேலும், கேஜிஎஃப் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ள மாளவிகா அவினாஷும் இந்த படத்தில் நடித்துள்ளார். நாயகிகளாக மிருணாளினியும் மம்தா மோகன் தாஸும் நடித்துள்ளனர். மேலும், கருணாகரன் மற்றும் தம்பி ராமைய்யா உள்ளிட்டோரும் உள்ளனர்.
ஆபத்தானவன் யார்
எனிமி டீசரின் இறுதியில் உலகத்திலேயே ஆபத்தானவன் யார் என்கிற கேள்வியை எழுப்பும் பிரகாஷ் ராஜின் குரல் உன்னைப் பற்றி முழுமையாக தெரிந்த நண்பன் தான் என செம வசனத்தையும் வைத்து மிரட்டுகின்றனர். ஒவ்வொரு காட்சியிலும் துப்பாக்கியும் கையுமாக ஆர்யா மற்றும் விஷால் பட்டையை கிளப்பி உள்ளனர்.
-
Aadujeevitham Review: ஆடு ஜீவிதம் விமர்சனம்.. பாலைவனத்தில் அடிமை வாழ்க்கை.. கண்ணெல்லாம் கலங்குது!
-
சீதனமாக சொகுசு கார்.. ரோபோ சங்கர் மனசே மனசு.. இந்திரஜாவின் திருமண பரிசு இவ்ளோ காஸ்ட்லியா?
-
என்னைவிட நல்லா நடிப்பியா?.. 5 விரலும் பதியுறமாதிரி அறைந்த தம்பி ராமைய்யா.. கும்கி சுப்பையா பகீர்!