துபாய் ஷெட்யூல் ஓவர்.. அடுத்து எனிமி படப்பிடிப்பு எங்கே தெரியுமா? வைரலாகும் தகவல்!

சென்னை: நடிகர் விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் எனிமி படத்தின் துபாய் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

இருமுகன் படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்காக துபாயில் 50 அடி உயரத்தில் இருந்து சமீபத்தில் விஷால் குதித்த ஸ்டன்ட் காட்சி படமாக்கப்பட்டது.

இந்நிலையில், துபாய் படப்பிடிப்பை முடித்த எனிமி படக்குழு கடைசி ஷெட்யூலை சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இன்னொரு இரும்புத்திரை

இன்னொரு இரும்புத்திரை

அறிமுக இயக்குநர் ஆனந்தன் இயக்கத்தில் விஷால், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கசாண்ட்ரா, ரோபோ சங்கர் மற்றும் கே.ஆர். விஜயா உள்ளிட்டோர் நடிப்பில் சக்ரா திரைப்படம் வெளியானது. பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த இரும்புத்திரை போலவே இந்த படமும் சைபர் திருட்டை மையமாக கொண்டு உருவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

எதிரியான நண்பர்கள்

எதிரியான நண்பர்கள்

இயக்குநர் பாலாவின் அவன் இவன் படத்தில் இணைந்து நடித்த விஷால் மற்றும் ஆர்யா நிஜ வாழ்வில் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது உருவாகி வரும் எனிமி படத்தில் விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடித்து வருகிறார்.

இருமுகன் போலவே

இருமுகன் போலவே

அரிமா நம்பி, நோட்டா மற்றும் சியான் விக்ரமின் இருமுகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷாலின் எனிமி படம் உருவாகி வருகிறது. இருமுகன் படத்தை மலேசியாவில் எடுத்ததை போலவே எனிமி படத்தை துபாயில் எடுத்து வருகிறார் ஆனந்த் சங்கர்.

ஹீரோயின் யார்

ஹீரோயின் யார்

எனிமி படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டப்ஸ்மாஷ் புகழ் மிருணாளினி ரவி நடித்து வருகிறார். மேலும், விஷாலுக்கு ஜோடியாக சிவப்பதிகாரம் படத்தில் நடித்த மம்தா மோகன் தாஸ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம். நடிகர் பிரகாஸ் ராஜும் இந்த படத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ரிஸ்க் எடுத்த விஷால்

ரிஸ்க் எடுத்த விஷால்

இந்த படத்திற்காக சமீபத்தில், நடிகர் விஷால் துபாயில் உள்ள 50 அடி உயர அடுக்குமாடி கட்டடத்தில் இருந்து குதிக்கும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அதற்காக தயாராகி இருக்கும் நிலையில், எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி டிரெண்டாகின.

துபாய் படப்பிடிப்பு ஓவர்

துபாய் படப்பிடிப்பு ஓவர்

இந்நிலையில், தற்போது துபாயில் நடந்து வந்த எனிமி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. படக்குழுவினர் உடன் ஆர்யா மற்றும் விஷால் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி தீயாக பரவி வருகின்றன. எனிமி படத்தின் மூலம் அடுத்த ஹிட்டை விஷால் மற்றும் ஆர்யா பெறுவது நிச்சயம்.

குவியும் பாராட்டு

குவியும் பாராட்டு

சமீபத்தில் வெளியான ஆர்யாவின் டெடி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பாராட்டுக்களை அள்ளி வருகிறது. அடுத்ததாக பா. ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை படத்தின் மோஷன் போஸ்டரும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. மறுபுறம் சக்ரா படம் விஷாலுக்கு இந்த ஆண்டு ஒரு நல்ல வெற்றியை கொடுத்து இருக்கிறது. இவர்கள் இருவரும் இணைந்து நடித்து வரும் எனிமி படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சென்னையில் நடத்த

சென்னையில் நடத்த

துபாயில் 30 நாட்கள் நடந்த அதிரடியான ஷெட்யூல் முடிவடைந்துள்ள நிலையில், சென்னையில் கடைசி கட்ட படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. துபாயில் இருந்து சென்னை திரும்பி உள்ள படக்குழு ஒரு வார ஓய்வுக்கு பிறகு இறுதி கட்ட படப்பிடிப்ப ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X