'புஷ்பா' படத்தில்.. தெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜுனுக்கு வில்லனாகிறாரா ஆர்யா..? பரபரக்கும் தகவல்!

By

சென்னை: புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக பிரபல தமிழ் ஹீரோ நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அல்லு அர்ஜுன் நடிக்கும் படம், புஷ்பா. தெலுங்கு, தமிழ், இந்தி உட்பட ஐந்து மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது

இதில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயின். சுகுமார் இயக்குகிறார். தேவிஶ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார்.

பான் இந்தியா

பான் இந்தியா

இதன் ஷூட்டிங் தொடங்கிய நிலையில் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டது. இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதில் விஜய் சேதுபதி, வன அதிகாரியாக நடிக்கிறார் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது.

செம்மரக் கடத்தல்

செம்மரக் கடத்தல்

பின்னர் அவர் விலகினார். பாலிவுட் நடிகர் ஒருவர் வில்லனாக நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. அதுவும் உறுதிச் செய்யப்படவில்லை. இந்தப் படம் செம்மரக்கட்டை கடத்தல் தொடர்பான கதையை கொண்டது. கொரோனாவால் தடைபட்ட இந்தப் படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் மீண்டும் தொடங்கியது.

வில்லன் ஆர்யா

வில்லன் ஆர்யா

இந்தப் படத்தில் நடிகர் ஆர்யா வில்லனாக நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தில் மூன்று வில்லன்கள் இருப்பதாகவும் கன்னட நடிகர் தனஞ்செயா ஒரு வில்லனாக நடிக்கிறார் என்றும் தெலுங்கு காமெடி நடிகர் சுனில் மற்றொரு வில்லனாக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

மீண்டும் கூட்டணி

மீண்டும் கூட்டணி

வில்லன்களின் தலைவராக ஆர்யா நடிப்பதாகச் சொல்கிறார்கள். நடிகர் ஆர்யா ஏற்கனவே அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக, வருடு என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தில் அவர் நடிப்பு கவனிக்கப்பட்டது. இப்போது அல்லு அர்ஜுனுடன் மீண்டும் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்குகிறது.

Recommended Video

Sarpatta படத்தில் ஆர்யாவின் பெயர் இதுதான் | Exclusive Update
சர்பேட்டா பரம்பரை

சர்பேட்டா பரம்பரை

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் ஹீரோவாக நடிக்கும் படம், எனிமி. இதில் வில்லனாக நடித்து வருகிறார் ஆர்யா. அடுத்து பா.ரஞ்சித் இயக்கும் சார்பேட்டா பரம்பரை படத்தில் நடிக்கிறார். அவர் நடித்துள்ள டெடி, ஒடிடி தளத்தில் வெளியாகும் என்று தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X