சூப்பர்ஹிட் தர தயாராகும் பாலா..சூர்யாவுடன் கை கோர்க்கும் 2 பிரபல ஹீரோக்கள்.. வில்லன் யார் தெரியுமா?
சூர்யாவை வைத்து பாலா இயக்க உள்ள புதிய படத்தில் ஆர்யா, அதர்வா, ஆர்யா ஆகிய மூவரும் இணைய உள்ளதாக கூறப்படுகிறுது.
Recommended Video
சென்னை: சூர்யாவை வைத்து பாலா இயக்க உள்ள புதிய படத்தில் பிரபல ஹீரோக்கள் மூவர் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சேது படத்தின் மூலம் நடிகர் விக்ரமுக்கு மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி கொடுத்தவர் இயக்குனர் பாலா. தமிழ் சினிமாவில் இப்படி ஒரு இயக்குனரா என அனைவரும் வியந்து பார்க்கும் ஒருவர் அவர்.
இவர் தான் நந்தா படம் மூலம் சூர்யாவின் திரை வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தியவர். ஜோதிகாவின் ரீஎண்ட்ரியின் போது நாச்சியார் படம் மூலம் மாஸ் காட்டினார். இதையடுத்து விக்ரமுக்காக அவரது மகன் துருவ் விக்ரமை வைத்து வர்மா என்ற படத்தை இயக்கினார்.

அர்ஜுன்ரெட்டி ரீமேக்
இந்த படம் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்காகும். இவ்வளவு பெரிய இயக்குனர் ஒரு ரீமேக் படத்தை இயக்க ஒப்புக்கொண்டது விக்ரம் மீது அவர் வைத்திருந்த மரியாதைக்காக தான். ஆனால் அந்த படத்தை பாலா சரியாக எடுக்கவில்லை என தயாரிப்பு நிறுவனம் குற்றஞ்சாட்டியது.

விலகிய பாலா
இதனால் அப்படத்தில் இருந்து விலகினார் இயக்குனர் பாலா. தான் எடுத்த காட்சிகளை பயன்படுத்தக் கூடாது என்றும் உத்தரவு போட்டார். வேறு ஒரு இயக்குனரை வைத்து ஆதித்ய வர்மா என பெயரை மாற்றி, அப்படத்தை உருவாக்கியுள்ளனர்.

புதிய படம்
இந்நிலையில் இயக்குனர் பாலா உடனே ஒரு படத்தை எடுக்க வேண்டும் என முடிவு செய்தார். அதற்காக கதை மற்றம் திரைக்கதை அமைக்கும் பணியில் அவர் தனது குழுவுடன் தீவிரமாக பணியாற்றி வருகிறார். இந்த படத்தில் சூர்யா தான் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என கூறப்படுகிறது.

வில்லனாக ராணா
அவருடன் ஆர்யா மற்றும் அதர்வாவை இணைக்க பாலா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பாகுபலி வில்லன் ராணாவை இப்படத்தில் சேர்க்க திட்டமிட்டு வருகின்றனர். ஹீரோயினாக மஹிமா, பிந்து மாதவி உள்ளிட்டோர் நடிக்கலாம் தெரிகிறது.

நட்சத்திர பட்டாளம்
இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் ஒரு படம் எடுத்தால், அது சூப்பர் ஹிட் படமாக தான் இருக்க வேண்டும் என்பதில் பாலா உறுதியாக இருக்கிறார். அதற்காக தான் இந்த நட்சத்திரப் பட்டாளம் என்கிறது விவரம் அறிந்த வட்டாரங்கள்.


Click it and Unblock the Notifications











