நடிகைகளை பிரியாணி கொடுத்து மடக்கிவிடுகிறார் ஆர்யா - இது விஷால் ஸ்டேட்மென்ட்!
இளம் நடிகைகளை பிரியாணி கொடுத்து மடக்கி விடுகிறார் ஆர்யா என பேட்டியளித்துள்ளார் விஷால்.
விஷால், லட்சுமி மேனன் ஜோடியாக நடித்த பாண்டிய நாடு படம் தீபாவளிக்கு வெளியாவதையடுத்து படத்தின் தயாரிப்பாளரும் ஹீரோவுமான விஷால் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும்...

பாண்டியநாடு படம் குறித்து?
ஒரு மிடில் கிளாஸ் இளைஞனின் பழிவாங்கல் கதைதான். என் அப்பா கேரக்டரில் பாரதிராஜா நடிச்சிருக்கார். அதுதான் விசேஷம். கடைசி இருபது நிமிட காட்சிகள் பார்வையாளர்களைப் பரபரக்க வைக்கும்.
லட்சுமி மேனனுக்கும், எனக்குமான காதல் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கு.

பாரதிராஜாவுடன் நடித்த அனுபவம்
பாரதிராஜா என்ன தந்தை கேரக்டரில் வருகிறார். அப்பாவுக்கு பிரச்சினை வரும்போது மகன் வருத்தப்படுவான். மகனுக்கு சங்கடங்கள் வரும்போது அப்பா வருந்துவார். இது இயற்கையாக நடப்பது. அதைத்தான் படத்தில் வைத்துள்ளோம். இந்த படத்தை இன்னொரு சண்டைக்கோழி என்கின்றனர்.
மீரா ஜாஸ்மின் போல் லட்சுமிமேனன் கேரக்டர் அமைந்துள்ளது. விக்ராந்தும், சிறப்பாக நடித்துள்ளார். இயக்குநர் சுசீந்திரன் சொன்ன கதை பிடித்ததால்தான் நானே தயாரித்தேன்.

எப்போது திருமணம்?
ஆர்யாவுக்கு திருமணம் முடிந்த பிறகுதான் என் திருமணம் நடக்கும். எங்கள் இருவரது பெற்றோரும் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தபோது விஷால், ஆர்யா திருமணத்தை ஒரே மேடையில் நடத்தி விடலாமா? என்று பேசியுள்ளனர்.

திருமணம் ஒரே நாள், ஒரே மேடையிலா?
இல்லை. ஆர்யா திருமணம் முடிந்த மறுநாள் என் திருமணம் நடக்கும்.

வருங்கால மனைவி நடிகையா?
நடிகையை மணப்பதில் என்ன தவறு இருக்கிறது? நடிகையாகவும் இருக்கலாம், டான்சராகவும் இருக்கலாம். ஆனால் பெற்றோர் சம்மதத்துடன்தான் திருமணம் நடக்கும்.

நடிகைகளுக்கு ஆர்யா பிரியாணி தருகிறாராமே?
ஆமாங்க... விருந்து கொடுத்துதான் எல்லோரையும் மடக்கிடறார் அவர். எனக்கு தெரிந்த நடிகைகளிடம் அண்ணாநகரில் உள்ள ஆர்யா வீட்டுக்கு மட்டும் பிரியாணி சாப்பிடப் போகாதீர்கள் என்று சொல்லி வைத்திருக்கிறேன். பெண்கள் மத்தியில் ஒரு மணி நேரம் இல்லாவிட்டால் ஆர்யாவுக்கு ஜூரமே வந்துவிடும்.
பெண்களுக்கு அவரைத்தான் பிடிக்கிறது. என்னை எல்லாம் பிரியாணி விருந்துக்கு கூப்பிடவே மாட்டேங்கிறார். வீட்டுக்கே பார்சலில் அனுப்பி விடுகிறார்," என்றார் ஜாலியாக.


Click it and Unblock the Notifications











