சாயிஷாவுக்கு சதீஷ் முத்தம் கொடுத்த பிறகு ஆர்யா என்ன செய்தார் தெரியுமா?
சாயிஷாவுக்கு சதீஷ் கிஸ் ஸ்மைலி போட்டதற்கு ஆர்யா கிண்டலாக ட்வீட் செய்துள்ளார்.
சென்னை: கஜினிகாந்த் புரோமோஷன் வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஸ்டுடியோ க்ரீன் கே.இ.ஞானவேல்ராஜா தாயாரிப்பில் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கி ஆர்யா சாயிஷா நடித்திருக்கும் திரைப்படம் கஜினிகாந்த். இப்படம் ஆகஸ்ட் 3ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

சென்னை ரசிகர்கள் ரிலீஸ் தேதிக்கு முன்பாகவே படத்தை பார்ப்பதற்கான எளிய வாய்ப்பை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் வழங்கியுள்ளது. ட்விட்டரில் கேட்கப்படும் எளிதான கேள்விக்கு பதிலளிக்கும் சென்னை ரசிகர்கள் படத்தை ரிலீசுக்கு முன்பே பார்க்க முடியும்.
இந்த நிலையில் படத்தின் புரோமோஷன் வேலைகளில் மும்முரமாக படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். ஒரு தொலைக்காட்சி சேனலில் நடைபெற்ற புரோமோஷன் நிகழ்ச்சிக்கு பிறகு க்ரூப் போட்டோவை ட்விட்டரில் சதீஷ் பதிவிட்டுள்ளார்.
ஆர்யாவையும் சந்தோஷ் பி ஜெயக்குமாரையும் கிண்டல் செய்யும் விதமாக இரண்டு ஸ்மைலி போட்டுவிட்டு "மூன்றாவதாக இருக்கும் கிஸ் ஸ்மைலி... நிச்சயமா..." என பதிவிட்டுள்ளார். அது சாயிஷாவை மனதில் வைத்துதான் என தெரிந்துகொண்ட ஆர்யா சதீஷை கிண்டல் செய்யும் விதமாக ரீட்வீட் செய்துள்ளார்.
இப்படத்தில் ஆர்யா, சாயிஷா, முகுல் தேவ், மற்றும் பலருடன் சதிஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பாலு ஒளிப்பதிவு செய்துள்ளார், பாலமுரளி பாலு இசையமைத்துள்ளார். பிரசன்னா ஜிகே படத்தொகுப்பு செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











