அம்மா சாயிஷாவுடன் செம க்யூட்டான டான்ஸ் போட்ட பொண்ணு.. இப்பவே அடுத்த ஹீரோயினை ரெடி பண்றாங்களா!
சென்னை: நடிகர் ஆர்யாவின் மனைவியும் நடிகையுமான சாயிஷா தனது அன்பு மகளுடன் நடனமாடிய வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளார்.
42 வயதாகும் நடிகர் ஆர்யா கடந்த 2019ம் ஆண்டு வனமகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

இந்த நட்சத்திர ஜோடிக்கு கடந்த 2021ம் ஆண்டு அழகிய பெண் குழந்தை பிறந்தது. அரியானா என பெயரிட்டு வளர்த்து வரும் தனது குழந்தையுடன் நடனமாடும் வீடியோவை சாயிஷா வெளியிட்டுள்ளார்.
நடிகர் ஆர்யாவின் திரைப்பயணம்: 2005ம் ஆண்டு வெளியான அறிந்தும் அறியாமலும் படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஆர்யா. உள்ளம் கேட்குமே படத்தில் அப்படியே சாக்லேட் பாயாக மாறிய அவர் பல படங்களில் அப்படியே பல் இளித்தபடியே நடித்து ஏகப்பட்ட ரசிகைகளின் மனதில் பாஸ் என்கிற பாஸ்கரனாகவே மாறினார்.
அதே சமயம் பாலாவின் நான் கடவுள், அவன் இவன் படங்களில் தனக்குள் இருந்த நல்ல நடிகரையும் வெளிக்கொண்டு வந்தார். அதன் விளைவாக மகாமுனி, சார்பட்டா பரம்பரை என மிரட்டலான படங்களையும் கொடுத்து வந்த ஆர்யா சமீப காலமாக ஆக்ஷன் படங்களில் நடித்து வருகிறார்.
காதல் திருமணம்: சிம்பு, விஷால் போலவே ஆர்யாவும் திருமணம் ஆகமாலே இருந்து விடுவாரா என பயந்து "எங்க வீட்டு மாப்பிள்ளை" என்கிற ரியாலிட்டி ஷோவையே நடத்தினர்.
ஆனால், அந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்ட பெண்களில் வெற்றிப் பெற்ற நடிகை அபர்ணதியை ஆர்யா திருமணம் செய்துக் கொள்ளாமல் எஸ்கேப் ஆகி விட்டார். அதன் பின்னர், கஜினிகாந்த் படத்தில் ஜோடியாக நடித்த நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
ராவடி பாட்டுக்கு குத்தாட்டம்: வனமகன், கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா, கஜினிகாந்த், காப்பான், டெடி உள்ளிட்ட சில படங்களில் நடித்த நடிகை சாயிஷா ஆர்யாவை திருமணம் செய்துக் கொண்டு சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் வெளியான சிம்புவின் பத்து தல படத்தில் கெளதம் கார்த்திக்குடன் இணைந்து ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான ராவடி பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டிருந்தார்.
மகளுடன் டான்ஸ்: 2 வயதே ஆகும் தனது செல்லக்குட்டி அரியானாவுடன் தற்போது டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்றை நடிகை சாயிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.
சாயிஷா போல ஆடுவாருன்னு பார்த்தால் ஆர்யா போல ஆடுறாரே குட்டிப் பொண்ணு என்றும் இப்பவே டான்ஸ் பயிற்சி கொடுக்கிறீங்க, அடுத்த ஹீரோயினா அரியானாவை ரெடி பண்றீங்களா என சாயிஷாவின் நண்பர்களும் ரசிகர்களும் கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











