ஆர்யா மகள் அதுக்குள்ள இப்படி வளர்ந்துட்டாரே.. பர்த்டே பார்ட்டி புகைப்படங்களை வெளியிட்ட சாயிஷா!
சென்னை: நடிகர் ஆர்யாவின் செல்லக்குட்டி மகளுக்கு 3 வயது நிரம்பிய நிலையில், பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களை அவரது மனைவி சாயிஷா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். குட்டி தேவதைக்கு பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சிம்பு, விஷால் போலவே ஆர்யாவும் மோஸ்ட் வாண்டட் பேச்சுலராக இருந்து வந்த நிலையில், கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் அவருக்கு மணமகள் தேடுவது போன்ற ரியாலிட்டி ஷோ நடைபெற்றது.

அதில், அபர்ணதி லீடிங்கில் வந்த நிலையில், ஆர்யா கடைசியாக யாரையும் திருமணம் செய்துக் கொள்ளமாட்டேன் என எஸ்கேப் ஆகி விட்டு கஜினிகாந்த் படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த சாயிஷாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
ஆர்யா - சாயிஷா திருமணம்: கஜினிகாந்த், காப்பான் படங்களில் இருவரும் தொடர்ந்து நடித்த போது அவர்கள் காதல் திருமணத்தை நோக்கி நகர்ந்தது. கடந்த 2019ம் ஆண்டு சாயிஷாவை திருமணம் செய்துக் கொண்டார் ஆர்யா. ஜெயம் ரவி நடித்த வனமகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சாயிஷா கடைசியாக கணவருக்கு ஜோடியாக டெடி படத்தில் நடித்தார். அதன் பின்னர், சிம்புவின் பத்து தல படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடினார்.
ஆர்யா மகள்: ஆர்யா மற்றும் சாயிஷாவுக்கு கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் இறுதியில் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அரியானா என பெயர் வைத்து வளர்த்து வருகின்றனர். ஆர்யாவின் மகள் சமீபத்தில் 3வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சாயிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார்.
கிரீடத்துடன் செம க்யூட்: தலையில் கிரீடம் வைத்துக் கொண்டு அப்பா ஆர்யா மற்றும் அம்மா சாயிஷாவுடன் செம க்யூட்டாக அரியானா போஸ் கொடுத்துள்ள அழகை ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர். சாயிஷாவின் அம்மாவுடன் பேத்தி கொடுத்த போஸும் கவனத்தை ஈர்த்துள்ளது.
கம்பேக் கொடுப்பாரா ஆர்யா: ஆர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான சில படங்கள் சரியாக போகவில்லை. அடுத்து மிஸ்டர் எக்ஸ் படத்தின் மூலம் கம்பேக் கொடுக்க காத்திருக்கிறார். மேலும், சந்தானத்தின் டிடி ரிட்டர்ன்ஸ் 2 படத்தையும் ஆர்யா தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











