‘எனிமி‘ படப்பிடிப்பை முடித்த ஆர்யா… கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு !

சென்னை : எனிமி படத்தில் நடிகர் ஆர்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் முடிந்துவிட்டன.

அதனை, படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி வருகின்றனர்.

விஷால், ஆர்யா இணைந்து நடிக்கும் இப்படத்தை மினி ஸ்டுடியோஸ் வினோத் குமார் தயாரித்து வருகிறார்.

மீண்டும் இப்படத்தில்

மீண்டும் இப்படத்தில்

அரிமா நம்பி, இருமுகன், நோட்டா படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். அவன் இவன் படத்துக்குப் பிறகு விஷால், ஆர்யா மீண்டும் இப்படத்தில் இணைந்து நடிக்கின்றனர். நாயகி மம்தா மோகன்தாஸ், சிவப்பதிகாரம் படத்தில் ஏற்கனவே விஷாலுடன் நடித்துள்ளார்.

கொண்டாட்டம்

கொண்டாட்டம்

ஆக்ஷன் படமாக தயாராகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொரோனா இரண்டாம் அலையிலும் தொடர்ந்து நடந்தது. நேற்றுடன் ஆர்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் நிறைவடைந்தன. அதனை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி வருகின்றனர். மேலும் ஆனந்த் சங்கர், விஷால் ஆகியோர் ஆர்யாவுக்கு நன்றி தெரிவித்தனர். பிரகாஷ்ராஜ் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

தோல்வி

தோல்வி

விஷால் நடிப்பில் 2018 மே மாதம் வெளிவந்த இரும்புத்திரை வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து வெளிவந்த சண்டக்கோழி2, அயோக்யா, ஆக்ஷன், சக்ரா படங்கள் தோல்வியடைந்தன. எனிமி விஷாலின் தொடர் தோல்விகளுக்கு ஸ்பீடு பிரேக் போடும் என்று நம்புகிறார். படத்தை திரையரங்கில் மட்டுமே வெளியிடுவது என தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளார்.

ஆர்யாவின் 30வது படம்

ஆர்யாவின் 30வது படம்

பா ரஞ்சித் இயக்கத்தில் ஆரியாவின் 30வது படமாக சார்பட்டா பரம்பரை உருவாகி வருகிறது. இதில் ஆர்யாவுக்கு ஜோடியாக துஷாரா விஜயன், ஜான் கொக்கேன், சந்தோஷ், பசுபதி, கலையரசன், காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X