கொரோனா தடுப்பூசி...முதல் டோஸ் போட்டுக் கொண்ட ஆர்யா

சென்னை : கொரோனா இரண்டாம் அலைக்கு எதிராக இந்தியா போராடி வருகிறது. மக்களை கொரோனாவின் தாக்கத்திலிருந்து காப்பாற்ற தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.

தற்போது 18 வயதிற்கு மேல், 44 வயதிற்கு உட்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போட்டுக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் அதிகமானவர்கள் தடுப்பூசியின் முதல் டோஸினை போட்டுக் கொண்டு வருகின்றனர்.

Arya gets his first jab of the COVID-19 vaccine

இதற்கிடையில் தடுப்பூசி போட்டுக் கொள்வது தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த பிரபலங்கள் பலரும் தாங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்ட ஃபோட்டோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இதில் லேட்டஸ்ட்டாக நடிகர் ஆர்யா, கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக் கொண்டுள்ளார். இந்த ஃபோட்டோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள ஆர்யா, முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டேன். நீங்களும் சீக்கிரம் தடுப்பூசி போட்டுக் கோங்க என்ற கேப்ஷன் பதிவிட்டுள்ளார்.

Arya gets his first jab of the COVID-19 vaccine

இதற்கு முன் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, விக்னேஷ் சிவன், சூர்யா, ஜோதிகா, யோகி பாபு, வாணி போஜன், சிம்ரன், மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலரும் தடுப்பூசி போட்டுக் கொண்டு, அந்த ஃபோட்டோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

ஆர்யா தற்போது அரண்மனை 3, எனிமி, சார்பேட்டா பரம்பரை உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இதில் விஷால் நடிக்கும் எனிமி படத்தில் முக்கிய வில்லன் ரோலில் ஆர்யா நடிக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X