Arya: அடிமேல அடி வாங்கும் ஆர்யா.. பா. ரஞ்சித் ஏதாவது பார்த்து செஞ்சா தான் உண்டு போல!

சென்னை: சார்பட்டா பரம்பரை படத்துக்கு பிறகு நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியாகி வரும் படங்கள் தொடர்ந்து படு தோல்வியை சந்தித்து வருகின்றன.

விஷால் உடன் இணைந்து ஆர்யா வில்லனாக நடித்த எனிமி, பிரடேட்டர் பாணி படமாக வெளியான கேப்டன் மற்றும் இந்த வாரம் வெளியான காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் என தொடர்ந்து ஆர்யாவுக்கு வெற்றி வாய்ப்பே இல்லாமல் போய் விட்டது.

கடுமையாக உழைத்தாலும், நடிகர் ஆர்யா கதை தேர்வில் சொதப்புவது தான் இப்படி அவருக்கு அடுத்தடுத்த தோல்விகள் ஏற்பட காரணம் என்கின்றனர்.

Arya gives half dozen flop movies including latest release Kathar Baasha Endra Muthuramalingam

நடிகர் ஆர்யா: அறிந்தும் அறியாமலும் படத்தில் "தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா" என நெகட்டிவ் கேரக்டரில் திமிராக நடித்து ரசிகர்களை கவர்ந்து அறிமுகமானவர் நடிகர் ஆர்யா.

உள்ளம் கேட்குமே, கலாபக் காதலன், பட்டியல், வட்டாரம், ஓரம் போ, நான் கடவுள், மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், அவன் இவன், வேட்டை, ராஜா ராணி, ஆரம்பம், மகாமுனி, சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட பல படங்களில் வித்தியாசமாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனங்களில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார்.

சாக்லேட் பாயாகவும், ரிஸ்க் எடுத்து நடிக்கும் ஹீரோவாகவும் படத்துக்கு படம் வெரைட்டி காட்டி நடித்து வரும் ஆர்யா சமீப காலமாக நடிக்கும் படங்கள் பெரிதாக ஹிட் அடிக்கவில்லை என்பது அவரது ரசிகர்களை பெரிதும் ஏமாற்றி வருகிறது.

சார்பட்டா பரம்பரை சாதனை: ஆர்யாவுக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

ஆனால், அந்த படம் நேரடியாக ஓடிடியில் வெளியான நிலையில், பாக்ஸ் ஆபிஸில் ரெக்கார்டு படைக்கவில்லை. ஆர்யாவின் கடின உழைப்பு மற்றும் நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்தன.

தொடர் தோல்வி: சார்பட்டா பரம்பரை படத்திற்கு பிறகு ஆர்யா நடித்த அரண்மனை 3, எனிமி, கேப்டன், காபி வித் காதல் (கேமியோ), வசந்த முல்லை, காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் என அரை டஜன் படங்கள் தோல்வியை தழுவி உள்ளன.

Arya gives half dozen flop movies including latest release Kathar Baasha Endra Muthuramalingam

சார்பட்டா படத்துக்கு பிறகு ஆர்யா கம்பேக் கொடுப்பார் என்று பார்த்தால், ஒரு சுமாரான ஹிட் கூட அவருக்கு கிடைக்கவில்லையே என அவரது ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

சொதப்பிய காதர்பாட்சா: முத்தையா இயக்கத்தில் ஒரே டெம்பிளேட் படமாக வெளியானாலும் கடந்த ஆண்டு வெளியான விருமன் படம் சுமார் ஹிட் அடித்தது. ஆனால், இந்த வாரம் வெளியான காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் படம் முற்றிலுமாக சொதப்பி விட்டது ஆர்யாவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளதாக கூறுகின்றனர்.

இஸ்லாமிய கதையை மையமாக வைத்து தமிழில் வெளியாகும் படங்களுக்கு மக்கள் கொஞ்சமும் ஆதரவு அளிப்பதில்லை என்பது தான் காரணமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

மேலும், படத்தை பார்த்த ரசிகர்களும் வெறும் சண்டைக் காட்சிகள் மட்டுமே நிரம்பி இருக்கிறது. எமோஷனல் கனெக்ட்டே இல்லை என தங்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.

பா. ரஞ்சித் தான் காப்பாற்ற வேண்டும்: ஆர்யா அடுத்ததாக மிஸ்டர் எக்ஸ் படத்தில் நடித்து வருகிறார். அதன் பின்னர் சார்பட்டா 2 படத்தில் நடிப்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

மீண்டும் பா. ரஞ்சித் தான் ஆர்யாவுக்கு நல்லவொரு வெற்றிப் படத்தைக் கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X