தல பிறந்தநாளுக்கு பரிசு அறிவித்த ஆர்யா: தேவையே இல்லை என்று கூறும் ரசிகர்கள்
Recommended Video

சென்னை: தல பிறந்தநாளுக்கு தான் ஒரு பரிசு கொடுக்கப் போவதாக நடிகர் ஆர்யா அறிவித்துள்ளார்.
அஜீத்தின் 47வது பிறந்தநாளை கொண்டாட அவரின் ரசிகர்கள் ஏற்கனவே தயாராகிவிட்டனர். போஸ்டர், பேனர் என்று அமர்க்களப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் தல பிறந்தநாளுக்கு ஆர்யா ஒரு பரிசு கொடுக்கப் போகிறாராம்.
பரிசு
தல பிறந்தநாளுக்கு நான் ஒரு பரிசு வைத்துள்ளேன் என்று ட்வீட்டியுள்ளார் ஆர்யா. அவர் நடித்து வரும் கஜினிகாந்த் படத்தின் ட்ரெய்லரை அஜீத் பிறந்தநாளான மே 1ம் தேதி வெளியிடுகிறார்களாம்.

நடிகை
அடல்ட் காமெடி படங்களை இயக்குவதற்கு பெயர் போன சந்தோஷ் பி ஜெயக்குமார் தான் கஜினிகாந்த் படத்தை இயக்கி வருகிறார். ஆர்யா தனக்கு ஜோடியாக நடிக்கும் சயீஷாவின் பெயரை ட்விட்டரில் குறிப்பிடும்போது எல்லாம் ஜூஸி என்று போடுவது ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. அது என்ன அந்த புள்ளைய பார்த்து ஜூஸி என்பது என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தேவையா?
தல பிறந்தநாளுமா அதுவுமா அந்த மாதிரியான படத்தின் ட்ரெய்லரையா வெளியிடுவது என்று அஜீத் ரசிகர்கள் கேட்டுள்ளனர். கஜினிகாந்த் காமெடி படம் தான் என்று படக்குழு கூறினாலும் அது அடல்ட் காமெடி படமே என்று ரசிகர்கள் நம்புகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கோபம்
படத்தில் ஆர்யாவின் கதாபாத்திரத்தின் பெயர் ரஜினிகாந்த் என்று வைத்துள்ளதில் தலைவர் ரசிகர்கள் கோபமாக உள்ளனர். போஸ்டரில் வேறு ரஜினியின் தர்மத்தின் தலைவனை காப்பியடித்ததும் அவர்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது.
எங்க வீட்டு மாப்பிள்ளை
ஆர்யாவின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் இறுதி வரை வந்த அந்த மூன்று பெண்களில் யாரை திருமணம் செய்யப் போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











