ஷூட்டிங்கில் விபத்து.. ஆக்‌ஷன் காட்சியில் நடித்தபோது நடிகர் ஆர்யா காயம்.. படக்குழு அதிர்ச்சி!

By

சென்னை: சண்டைக்காட்சி படப்பிடிப்பின் போது நடிகர் ஆர்யாவிற்கு காயம் ஏற்பட்டதாக எனிமி படக்குழு தெரிவித்துள்ளது.

நடிகர் விஷால், சக்ரா படத்தில் நடித்து முடித்துள்ளார். இதை எம்.எஸ் ஆனந்தன் இயக்கி இருக்கிறார்.

இதில் அவர் ராணுவ அதிகாரியாக நடிக்கிறார். ஸ்ரத்தா ஶ்ரீநாத், ரெஜினா காஸன்ட்ரா முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

வில்லன் ஆர்யா

வில்லன் ஆர்யா

இதை அடுத்து அவர் எனிமி படத்தில் நடித்து வருகிறார். இதை ஆனந்த் ஷங்கர் இயக்குகிறார். இவர், விக்ரம் பிரபு நடித்த அரிமாநம்பி, விக்ரம், நயன்தாரா நடித்த இருமுருகன், விஜய் தேவரகொண்டா, மெஹ்ரின் நடித்த நோட்டா படங்களை இயக்கியவர். இந்தப் படத்தில் விஷாலின் நெருங்கிய நண்பர் ஆர்யா, வில்லனாக நடிக்கிறார்.

மிருணாளினி ரவி

மிருணாளினி ரவி

விஷால் ஜோடியாக மிருணாளினி ரவி நடிக்கிறார். தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ள மிருணாளினி, தமிழில் எம்.ஜி.ஆர் மகன், கோப்ரா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். வித்தியாசமான ஆக்‌ஷன் படமான இதை மினி ஸ்டுடியோஸ் சார்பில் எஸ். வினோத்குமார் தயாரிக்கிறார் .

சண்டைக் காட்சிகள்

சண்டைக் காட்சிகள்

இந்தப் படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் நடந்து வந்தது. இப்போது சென்னை பூந்தமல்லி அருகே ஈவிபி பிலிம் சிட்டியில் பிரமாண்ட செட் அமைத்து படப்பிடிப்பு நடந்து வருகிறது. விஷாலுக்கும் ஆர்யாவுக்குமான சண்டைக் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் இருவரும் டூப் இல்லாமல் நடித்து வருகின்றனர்.

கையில் காயம்

கையில் காயம்

இந்த படப்பிடிப்பின் போது ஆர்யாவிற்கு கையில் காயம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த படக்குழு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் படப்பிடிப்பில் கலந்துகொண்டார் என்று படக்குழு கூறியுள்ளது. இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X