ஆர்யாவோட புது பாக்ஸிங் பார்ட்னர் அந்த பிரபல நடிகையா? வைரலாகும் போட்டோஸ்.. ஒரே குஷி தான் போங்க!

சென்னை: நடிகர் ஆர்யா தனது புதிய பாக்ஸிங் பார்ட்னரை தனது ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி உள்ளார்.

Recommended Video

பாலாவிற்கு பிடித்த பிரியமானவள் • நான் கடவுள் Pooja

வடசென்னை இளைஞர்களின் பாக்ஸிங் வாழ்க்கையை மையமாக வைத்து இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கி வரும் புதிய படத்தில் பாக்ஸராக நடிகர் ஆர்யா நடித்து வருகிறார்.

அந்த படத்திற்காக ஆர்யா கட்டுமஸ்த்தான காட்டுத்தனமான உடற்கட்டுக்கு மாறிய புகைப்படங்கள் சமீபத்தில் பலரையும் ஆச்சர்யப்படுத்தின.

இரு படங்கள்

இரு படங்கள்

நடிகர் ஆர்யா நடிப்பில் இந்த ஆண்டு இதுவரை ஒரு படம் கூட ரிலீஸ் ஆகவில்லை. கடந்த ஆண்டு டபுள் ஆக்‌ஷனில் ஆர்யா நடித்த மகாமுனி படம் உலகத் தரம் வாய்ந்த சினிமாவாக உருவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. சூர்யாவின் காப்பான் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தாலும், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.

கரடி பொம்மையுடன்

கரடி பொம்மையுடன்

ஹாலிவுட் படங்களை பார்த்து இன்ஸ்பயராகி தமிழில் அதே போல படங்களை கம்மி பட்ஜெட்டில் எடுக்க முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்று வரும் இயக்குநர் சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள டெடி படம் ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது. உயிருள்ள கரடி பொம்மையுடன் நடிகர் ஆர்யா நடித்துள்ள அந்த படம் தியேட்டர் ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பா. ரஞ்சித் இயக்கத்தில்

பா. ரஞ்சித் இயக்கத்தில்

அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா படங்களை இயக்கிய இயக்குநர் பா. ரஞ்சித் அடுத்ததாக நடிகர் ஆர்யாவை வைத்து பாக்ஸிங் படம் ஒன்றை இயக்கி வருகிறார். சல்பேட்டா என அந்த படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

காட்டுத்தனம்

காட்டுத்தனம்

நடிகர் ஆர்யாவின் முரட்டுத்தனமான வொர்க்கவுட் புகைப்படங்கள் சமீபத்தில் சமூக வலைதளத்தில் வெளியாகி வேற லெவலில் வைரலானது. கடுமையான உடற்பயிற்சி செய்து அவர் இந்த தோற்றத்தை பெற்றார் என்றும், ஸ்டெராய்டு ஊசிகளை பயன்படுத்தினார் என்ற சர்ச்சைகளும் கூடவே கிளம்பின.

பாக்ஸிங் பார்ட்னர்

பாக்ஸிங் பார்ட்னர்

இந்நிலையில், தனது புதிய பாக்ஸிங் பார்ட்னரை நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் தனது ரசிகர்களுக்காக அறிமுகப்படுத்தி உள்ளார். அந்த பிரபல நடிகை வேறு யாரும் இல்லை நடிகர் ஆர்யாவின் லைஃப் பார்ட்னரான நடிகை சாயிஷா தான். வீட்டில் குத்திய கும்மாங்குத்து போதாது என்பதால், பாக்ஸிங் பயிற்சி மையத்திற்கும் வந்து ஆர்யாவை பன்ச் பண்ண வந்துவிட்டார்.

பக்காவா ஆடுவார்

பக்காவா ஆடுவார்

ஜெயம் ரவியின் வனமகன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாயிஷா. விஜய்சேதுபதியுடன் ஜுங்கா, ஆர்யாவுடன் கஜினிகாந்த் மற்றும் சூர்யாவுடன் காப்பான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கஜினிகாந்த் படத்தில் நடித்த போது ஆர்யாவுடன் காதல் மலர அவரது லைஃப் பார்ட்னராகி விட்டார். நடனத்தில் சிறப்பாக கலக்கி வரும் சாயிஷா, இனி பாக்ஸிங்கிலும் கலக்கப் போகிறார்.

சைக்கிளிங்

சைக்கிளிங்

ஃபிட்னஸ் ஃப்ரீக்கான நடிகர் ஆர்யா, சைக்கிளிங்கில் மற்ற எந்த நடிகரும் செய்ய முடியாத அளவுக்கு பல சாதனைகளை படைத்து வருகிறார். ஏகப்பட்ட வெளிநாடுகளுக்கும் சென்று பல ஆயிரம் மைல்கள் சைக்கிளை ஓட்டி அதன் அப்டேட்களையும் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். தொடர்ந்து ஆர்யா நடிப்பில் வெளியான பல படங்கள் தோல்வியை தழுவி வரும் நிலையில், டெடி மற்றும் சல்பேட்டா படங்கள் அவருக்கு நல்ல கம்பேக் படங்களாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X