இதை என்னால் நம்பவே முடியவில்லை: ஆர்யா பற்றி ட்வீட்டிய விஷால்
சென்னை: தனது நண்பர் விஷாலுக்கு நேரில் திருமண அழைப்பிதழ் கொடுத்துள்ளார் ஆர்யா.
நடிகர் ஆர்யாவுக்கும், நடிகை சயீஷாவுக்கும் வரும் மார்ச் மாதம் திருமணம் நடைபெற உள்ளது. திருமணம் ஹைதராபாத்திலும், வரவேற்பு நிகழ்ச்சி சென்னையிலும் நடக்கும் என்று கூறப்படுகிறது.
காப்பான் படப்பிடிப்பை முடித்துக் கொண்ட ஆர்யா பத்திரிகை வைக்கும் வேலையை துவங்கியுள்ளார்.
விஷால்
ஆர்யா பத்திரிகை கொடுத்தபோது எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ள விஷால் அந்த தருணத்தை நம்பவே முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
காத்திருப்பு
விஷாலின் ட்வீட்டை பார்த்த ஆர்யோவோ உன்னுடைய திருமண அழைப்புக்காக காத்திருக்கிறேன் என்று பதில் அளித்துள்ளார்.

அனிஷா
நடிகர் சங்க கட்டிட வேலைகள் முடிந்த பிறகு அங்கு வைத்து தான் அனிஷாவை திருமணம் செய்து கொள்வேன் என்று ஒரு முடிவோடு இருக்கிறார் விஷால். அதனால் நடிகர் சங்க கட்டிட வேலை முடிந்த கையோடு விஷாலுக்கு திருமணம் நடக்கும்.
தமிழ் ராக்கர்ஸ்
இந்த நெட்டிசன் சொல்வதை பார்த்தால் விஷாலுக்கு திருமணம் நடந்தது மாதிரி தான்.


Click it and Unblock the Notifications











