சைக்கிள் ரைடர் - பிரான்ஸ் நாட்டு சைக்கிள் போட்டியில் பங்கேற்கும் நடிகர் ஆர்யா

சென்னை: சைக்கிள் ரேஸ் பிரியரான நடிகர் ஆர்யா பாரிஸில் நடக்கும் 1200 கிலோ மீட்டர் நீண்ட தூர சைக்கிள் ரேஸில் கலந்துகொள்ளப்போகிறார். ஆர்யாவின் அணி வெற்றி பெற நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகரும் திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்யா 2005ஆம் ஆண்டு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான அறிந்தும் அறியாமலும் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதுவரை 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் நான் கடவுள், ராஜா ராணி, மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படங்கள் மூலம் பிரபலமானார்.

Arya is going to participate in Paris Brest Paris bicycle race

மேலும் நடிகர் ஆர்யா ஒரு சைக்ளிங் ஆர்வலர். ஆர்யா பல இடங்களுக்கு சைக்கிளில் வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். இவரும் நடிகர் சந்தானமும் ஞாயிறு தோறும் சென்னையில் இருந்து மகாபலிபுரம் வரை சைக்கிளிலேயே சென்று திரும்புவது வழக்கம். தற்போது நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலின் போது கூட நடிகர் ஆர்யா தனது வாக்கினை பதிவு செய்வதற்காக சைக்கிளில் தான் வந்தார்.

தனது ரசிகர்களையும் ட்விட்டர் - மூலமாக சைக்ளிங் செய்ய ஊக்குவித்து வருகிறார். அவர் சைக்கிள் ரைடராக பல தேசிய சைக்கிள் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அதன் தொடர்ச்சியாக பிரான்ஸ் நாட்டில் ஒரு நீண்ட தூர சைக்கிள் போட்டி நடக்கவிருக்கிறது.

இப்போட்டியில் பாரிஸ்-பிரெஸ்ட்-பாரிஸ் (PARIS-BREST-PARIS) எனும் மாபெரும் சைக்கிள் போட்டியில் 1200 கிலோமீட்டர் தூரத்தை ஒரு அணியாக கடக்க வேண்டும். இம்மாதம் நடைபெறும் இப்போட்டியில் ஆர்யாவின் அணி கலந்து கொள்ளவிருக்கிறது.

இப்போட்டியில் கலந்து கொள்ள போகும் ஆர்யாவின் அணிக்கான ஜெர்சியை நடிகர் சூர்யா அறிமுகம் செய்து வைத்தார். மேலும் ஆர்யா அணி சிறப்பாக சைக்கிள் ரைடு செய்து வெற்றிபெற தனது வாழ்த்தினை தெரிவித்தார். பிரான்ஸ் நாட்டில் ஆகஸ்ட் 18 ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 22 ம் தேதி வரை நடைபெறும் இந்த சைக்கிள் போட்டியில் சுமார் 6000 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

இது ஒரு புறம் இருக்க, ஆர்யா தனது சினிமா படப்பிடிப்பிலும் பிஸியாக தான் உள்ளார். கே.வி. ஆனந்த் இயக்கத்தில், எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் நடிகர் சூர்யா - நடிகர் ஆர்யா இணைந்து நடித்த காப்பான் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 30 தேதியன்று வெளியாகவுள்ளது. இவர்கள் இருவரின் கூட்டணியில் இப்படம் பெரும் வெற்றியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X