அவரும் இல்ல, இவரும் இல்ல.. 'அய்யப்பனும் கோஷியும்' ரீமேக்.. ஒருத்தர் மட்டும்தான் இதுவரை கன்பார்ம்!
சென்னை: அய்யப்பனும் கோஷியும் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிப்பதற்கு ஒரே ஒரு நடிகர் மட்டுமே முடிவாகியுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.
Recommended Video
பிருத்விராஜ், பிஜு மேனன் நடித்து மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான படம், அய்யப்பனும் கோஷியும்.
சச்சி இயக்கி இருந்த இந்தப் படத்தில், பிருத்விராஜ் முன்னாள் ராணுவ வீரராகவும் பிஜூ மேனன் சப் இன்ஸ்பெக்டராகவும் நடித்திருந்தனர்.

ஈகோ மோதல்
ரஞ்சித், கவுரி நந்தா, அன்னா ராஜன், அணில் நெடுமங்காடு உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் கேரளாவில் பலத்த வரவேற்பை பெற்றது. அதிகாரப் பின்னணி கொண்ட ஒருவனுக்கும் ஆதிவாசிப் பகுதியைச் சேர்ந்த சப் இன்ஸ்பெக்டருக்குமான ஈகோ மோதல்தான் படத்தின் கதை. படத்தை எவ்வளவு இயல்பாக கொடுக்க முடியுமோ, அவ்வளவு யதார்த்தமாக எடுத்திருந்தனர்.

போலீஸ் சோதனை
அட்டப்பாடி வனப்பகுதியில் மதுபானங்கள் வைத்திருக்க விதிக்கப்பட்டிருக்கும் தடையை மீறி, அங்கிருந்து மதுபாட்டில்களுடன் வருகிறார் பிருத்விராஜ். ஊட்டி செல்லும் வழியில் போலீஸ் சோதனையில் சப் இன்ஸ்பெக்டர் பிஜூ மேனனிடன் சிக்கிக் கொள்கிறார். முன்னாள் ராணுவ வீரரான பிருத்வி, போலீஸை அடிக்கப் பாய, பிஜூவுக்கும் ஈகோ வெளிப்படுகிறது. இந்த ஈகோ, இருவரது வாழ்க்கையையும் என்னவாக்குகிறது என்பதுதான் படம்.

களக்காத்த சந்தனமேரம்
இதில் இடம்பெற்றிருந்த, களக்காத்த சந்தனமேரம் வெகுவேகா பூத்திருக்கு என்ற பாடல் பட்டி தொட்டியெங்கும் பரவல் ஹிட். இந்தப் பாடலை நஞ்சம்மா என்ற பழங்குடியினப் பெண் பாடியிருந்தார். இதன் தமிழ் ரீமேக் உரிமையை, தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் வாங்கியுள்ளார். இவர், பொல்லாதவன், ஆடுகளம், ஜிகிர்தண்டா படங்களைத் தயாரித்தவர். சில படங்களில் நடித்தும் உள்ளார்.

சசிகுமார்
இந்தப் படத்தில், சரத்குமாரும் சசிகுமாரும் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாயின. இதுபற்றி தயாரிப்பாளர் கதிரேசனிடம் கேட்டபோது, இன்னும் யாரிடமும் பேசவில்லை. யார் நடிக்கிறார்கள் என்பதும் முடிவாகவில்லை. இது தவறானத் தகவல் என்று கூறியிருந்தார். இதையடுத்து இப்போது சசிகுமாரும் ஆர்யாவும் நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.

லாக்டவுன் முடிந்ததும்
இதுபற்றி விசாரித்தபோது, இதில் சசிகுமார் நடிப்பது மட்டுமே உறுதியாகி உள்ளது. வேறு யாரும் முடிவாகவில்லை. ஆர்யா நடிப்பதாக வந்த தகவலும் தவறானது. இயக்குனர் உள்ளிட்ட யாரும் இதுவரை முடிவாகவில்லை. லாக்டவுன் முடிந்தபிறகுதான் இந்தப் படம் பற்றி பேச இருக்கிறோம்' என்று தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications











