அய்யோ, சந்தானம் கூட வேலை பார்ப்பது ரொம்ப கஷ்டம்: ஆர்யா
சென்னை: சந்தானம் இரண்டு பேரை தாக்கியதை நடிகர் ஆர்யா கிண்டல் செய்துள்ளார்.
சேதுராமன் இயக்கத்தில் சந்தானம் அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ள படம் சக்க போடு போடு ராஜா. அந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ஆர்யா கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது,

சந்தானம்
முதலில் சந்தானத்திற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய உழைப்பு மட்டும் தான் இதற்கு காரணம் என்று நான் சொல்வேன்.

உழைப்பு
அவருடன் நடிக்கும்போது ஒவ்வொரு சீனுக்கும் 10 வெர்ஷன் வைத்திருப்பார். ஆடியோ ஃபங்ஷனுக்கு கூட 10 பேப்பருடன் வந்தார். எனக்கு சந்தானத்தை மிகவும் பிடிக்கும்.

டைமிங்
அவரின் நடிப்பு நேச்சுரலாக இருக்கும். டைமிங் பக்காவாக இருக்கும். அவருடன் நடிப்பது என்பது ரொம்ப கஷ்டமான விஷயம். பேசிக்கிட்டே இருப்பார் பக்கத்தில் இருப்பவர்களால் ரியாக்ஷனே கொடுக்க முடியாது.

ரியாக்ட்
மச்சி நீ சொல்வதற்கு என்னடா ரியாக்ட் பண்ணுவது கொஞ்சம் சொல்லிக் கொடுடா என்று கேட்பேன். சந்தானம் ஆக்ஷன் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

கைப்புள்ள
சமீபத்தில் நிஜ வாழ்க்கையில் ஆக்ஷன் செய்துள்ளார். சந்தானம் ஆக்ஷன் செய்வாரா என்று இனி யாருக்கும் சந்தேகம் வராது. அடிச்ச கைப்புள்ளைக்கே கையெல்லாம் தையல் போட்டிருக்கு. அடி வாங்குனவன் எப்படி இருப்பான் சொல்லவா வேண்டும் என்றார் ஆர்யா.


Click it and Unblock the Notifications